நாட்டின் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் நாங்கள்தான் - பொதுபல சேனா பகிரங்க அறிவிப்பு
நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் தமது அமைப்பே என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று 04-03-2013 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாடி வீடொன்றில் தேரர் ஒருவரின் பெயரை உபயோகித்து மோசடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்து பொதுபல சேனா அமைப்பினர் காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர்.
இதனையடுத்தே, பொதுபல சேனா அமைப்பு இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்தவர்கள் இதனை செய்யாவிட்டால் எங்களைப் போன்ற சமூக உணர்வுள்ளவர்கள் செய்ய வேண்டியது அவசியம். அதற்காக சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. சட்டம் இல்லாவிட்டால், சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
இதற்கு பின்னர் பொதுபல சேனா அமைப்பு நாட்டில் உத்தியோகபூர்வமற்ற காவல்துறை அமைப்பாகும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எங்கட அமைச்சர்களுக்கு போய் காவல் இருங்க.. எல்லானும் ஒண்ணுதான்
ReplyDeleteபாதுகாப்புச் செயலாளரும், முப்படைகளின் தளபதியும் தம்முடன் இருப்பதனைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள். உள்ளங்காய் நெல்லிக் கனியை சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
ReplyDeleteபொலிஸ் நாய்களா
ReplyDeleteஓகே... பாஸ்
நாய்களாவே இருங்க................
summa po oy
ReplyDeleteஇனி என்ன நாட்டில் நடக்கும் அட்டகாசங்கள முறையிட்டு பொதுபலசேனைகிட்ட மக்கள் மனு கொடுக்க கிழமிட வேண்டியதுதான் ??? ஆனா மனுக்கு தீர்வின்ரேல் மக்களின் பொருமை எல்லை மீருகையில் பொதுபலசேன பொருக்கி பலசேனையாக மக்களின் பார்வைக்கு தோன்றி துண்டைகாணோம் துணியை காணோம் என மக்களே அடித்து விரட்டும் நிலை உருவாகிவிடும் விதைப்பவன் விதைத்ததை அறுவடை செய்யதானே வேண்டும்
ReplyDeleteபோலிசின் புதிய "சேனா" பொது பல சேனா.
ReplyDelete