Header Ads



ஜாதிக ஹெல உருமயவின் புதிய கண்டுபிடிப்புக்கள் சில...!



(J.M.Hafees & Mohamed Asik)

ஜாதிக ஹெலஉருமய வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் நீண்ட விளக்கமாக இருப்பதனால் வாசகர் நலன் கருதி அதன் சாரம்சத்தை மட்டும் கீழே தர விரும்புகிறோம். 

சாரம்சம் இதுதான். 

ஜம்மியத்துல் உலமா

ஜம்மியத்துல் உலமா என்பது முஸ்லிம்களது அடிப்படை வாத இயக்கம். இது இலங்கையில் 1924 முதல் இயங்கியதாகக் கூறப்பட்டாலும் 2007 முதலே அறிய முடிந்தது. இருப்பினும் 1501 முதல் 1722 வரை பேர்ஸியாவில் சியா முஸ்லிமகளுக்காக இப்படி ஒன்று இருந்தது.

ஹலால்

ஹலால் என்பது இஸ்லாத்தின்படி 'சரியானவை' என்பதாகும். ஷரீஹாவை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு மூலாதாரம் குர்ஆனும் ஹதீஸூமாகும். எனவே இதற்கு சான்றிதழ் வழங்க உலமா சபைக்கு அதிகாரமில்லை. ஜம்மியத்துல் உலமா என்பது சமூக ரீதியில் ஒரு பிரிவினைவாத இயக்கம். பிரபாகரனும் இவர்களும் சமுகத்தை பிரிக் முயற்சி செய்யும் ஒரே வித செயற்பாட்டைக் கொண்டவர்கள்.   நாட்டின் மொத்த பொருளாதாரம் மற்றும் உணவு என்பவற்றைஇவர்கள் ஹலால், ஹராம் என பிரிப்பவர்களாகும். 91 சதவீத பௌத்த நாட்டில் இதை அனுமதிக்க முடியாது. ஜம்மியத்துல் உலமா தமக்கு சாதக மானவற்றில் ஹலாலை பின்பற்றுவதில்லை. உதாரமாக நோயாளிக்கு இரத்தம் கொடுத்தல், பல்வேறு மருந்வகைகள், யப்பான் வாகனம் போன்றன.

பர்தா

பிரேமதாச ஜனாதிபதியை இக்கட்டான நிலையில் வைத்து பாடசாலைகள் முதல் ஏனையவற்றில் பர்தா முறையை நடைமுறைப் படுத்தினர். டொனமூர் ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் பெண்களுக்கு வாக்குரிமை தேவையில்லை எனக் கூறினர். அதையே இப்பொழுதும் மேற்கொள்வதற்கு பெண்களை அடக்கி ஒடுக்கும் ஒரு முறையே பர்தாவாகும்.  பௌத்த இலட்சினையை மருந்து வகைகளில் பதித்து அதனை முஸ்லிம்கள் பாவிக்க வேண்டும் என்றால் செய்வார்களா?

ரெஸ்ட்டுரண்டுகள் மற்றும் சுப்பர் மார்கட்டுக்களில் பன்றி இறைச்சிக்கு உலமா சபை தடை விதித்துள்ளது. இதுபோல் பௌத்தர்கள் இந்துக்களும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தால் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா? கிருஸ்தவர்களும் முஸ்லிம்களைப் போல் கடவுளுக்கு அர்பணித்த உணவுகளை தயாரித்து வினியோகிக் முற்பட்ல் என்ன நடக்கும்?

ஹலால் சான்றிதழ்

ஹலால் சான்றிதழுக்கு 24 000 ரூபாமுதல் 250000 வரை ஆரம்பக் கட்டணம் அறவிடப்படுகிறது. மாதா மாதம் 50 000 வரை வழங்கப் படுகிறது.வருடா வருடம் 5 சதவீத அதிகரிப்பும் உள்ளது. இவ்வாறு 4500 பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் உண்டு. ஹலால் சான்றிதழ் மூலம் பௌத்தர்களது தனித்துவமான தயாரிப்புக்களின் இரகசியம் முஸ்லிம்களது கைக்குச் செல்கிறது. கடந்த பல தேர்தல்களில் பௌத்தர்களே ஆட்சி அதிகாரத்தை தீர் மானித்துள்ளனர். இதனை சில அரசியல் வாதிகள் மறந்து விட்டனர். எனவே பௌத்த பாரம் பரியங்களை கட்டி எழுப்பவேண்டியுள்ளது.

உலமாக்கள் வரலாற்றை மாற்றுகின்றனர்

1300 வருடமாக இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்வதாக உலமா சபை கூறுகிறது. அது தவறாகும். 15ம் 16ம் நூற்றாண்டுகளில் அரேபியர்களது கப்பல்களைத் தாக்குவதற்கு போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்தனர். இதன்படி 1517ம் ஆண்டு போத்துக் கேயர்கள் முஸ்லிம்களது களஞ்சிய அறை ஒன்றைத்தாக்கமுற்பட்ட போது சிங்கள மன்னர்கள் அதனைத் தடுக்க முன்வந்ததன் விளைவே சிங்கள்மன்னர்- போத்துக்கேயர் யுத்தமாக மாறியது.
முஸ்லிம்கள் தமது வர்த்தகத்திலேதான் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.

1526, 1529,1597 ஆகிய காலங்களில் போத்துக்கேயர் முஸ்லிம்களை விரட்டியபோது சிங்களவர்களே பாதுகாத்தனர். 1626 ல் நான்கு தலைமுறையின் பின் தாம் பௌத்தராக மாறுவதாக பொய்வாக்குறுதி அளித்து 4000 முஸ்லிம்கள் சேனரத் மன்னனிடம் புகழிடம் பெற்றனர். இவ்வாறே மட்டக்களப்பிலும் புத்தளத்திலும் முஸ்லிம்கள் குடியேறினர்.

செனரத் மன்னன் போர்துக்கேயருடன் யுத்தம் புரிந்த போது மேற்சொன்ன 4000 முஸ்லிம்களில் 1500 பேர் மட்டுமே யுத்தித்திற்கு வந்தனர் .மற்றவர்கள் நன்றி கெட்டவர்கள் என்பது தெளிவு. ஒலாந்தர் கொழும்பைக்கைப்பற்றும் போது ஒரு முஸ்லிம் கூட கொழும்பில் இல்லை. (இன்று கொழும்பில் 40 சதவீதம் முஸ்லிம்கள்)ஆங்கிலேயர்களுக்கு சிங்கள ராஜ்யம் பற்றி தகவல் வழங்கியோர் முஸ்லிம்களே.

1802ம் ஆண்டு யுத்தத்திற்கு மூலகாரணமே முஸ்லிம்கள்தான்.

1814ம் ஆண்டு முஸ்லிம்கள் ஆங்கிலேயருடன் இணைந்து கலகம் செய்தனர்.
வெல்லஸ்ஸ கலவரதத்தில் நெய்னாமரிக்கார் தலைமையிலான குழு சிங்களப் பிரதேசத்தை பாதுகாக்க முற்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார். இருப்பினும் ஆங்கிலேயர் வெற்றி பெற்று கண்டி பதுளை,மாவனெல்லை.மாத்தளை போன்ற பகுதிகளில் முஸ்லிம்களை குடியேற்றியதாக எம்.எஸ்.எம்.அனீஸ் எழுதியுள்ளார். மடடக்களப்பை அண்மித்த வெல்லஸ்ஸ முஸ்லிம்கள் தமக்காக ஒரு தலைவரை நியமிக்கும் படி கேட்டு அது நிறைவேற்றப்பட்டது. 

1817- 1818 காலப்பகுதி யுத்தின் போது ஆங்கிலேயருக்கு தகவல் வழங்கியது, பேக்குவரத்து வழங்கிய போன்ற விடயங்களை முஸ்லீம்களே செய்தனர். இதன் மூலம் தென்கிழக்கு முஸ்லிம் மருமலர்ச்சியும் வெல்லஸ்ஸ சிங்களவர் தோல்வியும் ஏற்பட்டது. முஸ்லிம்களது ஒழுக்கம் திறமை, பொருப்புணர்ச்சி,போன்றவற்றை அறிந்த ஆங்கிலேயர் முஸ்லிம்களை உயர் பதவிகளில் வைத்ததாக 'அம்பார முஸ்லிம் உரிமய' என்ற நூலில் பக்கம் 15,16,17 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜிம்மியதுல் உலமாவின் பண்டைய தலைவர்கள் நாட்டைக் காத்த வரலாரு இதுதான்.

1817.6.2 ஆங்கிலேயர் முஸ்லிமகளை கொழும்பில் குடியேற அனுமதித்தன் பிரகாரமே இன்று முஜூபுர் றஹ்மான. ஆஸாத் சாலீ. முஸம்மில் போன்றோர் கூச்சல் போட முடிநடதுள்ளது. சிங்கள விடுதலையுத்தம் தோட்கடிக்கப்பட்டதால் 3 முதல் 5 பணம் காசுக்கு நூற்றுக் கணக்கான சிங்களக் காணிகள் மத்திய மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டன.

1899 ல் வஹ்ஹாபியான ஒராபிபாசா வருகையால் சித்தி லெவ்வை கின்னியாவில் நிறுவிய பாடசாலயே அடிப்படை வாதத்தைப் போதிக்கும் முதல் கல்விக் கூடமாகும். அது இன்று பல்கலைக்கழகமாகியுள்ளது. முஸ்லிம்கள் தனி இனம் என்ற கோரிக்கை வழுப் பெற்றகாலத்தில் முதன் முதலாக கம்பலையில் முஸ்லிம்கள் சிங்களவரை தாக்க முற்பட்டனர். முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர் உதவி செய்து பௌத்த தலைவர்களையும் பௌத்த எமுச்சியையும் அடக்கினர்.

1926ல் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு டொனமூர் ஆணைக்குமு முன் சாட்சியம் அளிக்க உருவாக்கப்பட்டது. ஜம்மியதுல் உலமா கூறும் 1924ம் ஆண்டு இதுதான் இரண்டாம் உலகமகா யுத்தத்தில் முஸ்லிம்களை ஆங்கிலேயர் தமக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டனர். நாடு அல்லற்படும் போது முஸ்லிம்கள் தமது இலாபத்திற்கு அதனை தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்வது அவர்களது வழக்கமாகும்.

றஹ்மான் அலி சவுத்திரிதான் பிரிவினைவாத்திற்கு அடித்தளமிட்டவர்.1931ம் ஆண்டு அவர் பாகிஸ்தானுடன் இணைந்ததாக நசரிஸ்தான்(மட்டக்களப்பு முதல் திருகோணமலைவரை) சபரிஸ்தான்(கொழும்பு முதல் புத்தளம் வரை ) கேட்டார். 1949 ல் செல்வநாயகம் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த போது காரியப்பர் போன்றோர் அதில் இணைந்தனர்.

அதன் பின் முஸ்லிம் தலைவர்கள் தமிழ்பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டனர். 1976 பலீல் ஏ மஜீத், சம்சுதீன் போன்றவர்கள் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை அமைத்தனர். அதன்பின் வந்த அஷ்ரப் 1977 தேர்தலில் 'அமிர்தலிங்கம் தமிழீழத்தை கை விட்டாலும் நான் கைவிடமாட்டேன்' என்று கூறினார்.

ஜம்மியத்துல் உலமா சொல்வது போல் முஸ்லிம்கள் பிரிவினை கோராதவர்கள் அல்ல. அது பொய். 1988 ல் பிரேமதாச நெருக்குலுக்கு உள்ளான நிலையில் அஷ்ரப் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம தீவிர வாதிகளே நன்மையடைந்தனர். வெளிநாட்டு மதபோதகர்கள் உள்வருதல் முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கான நிதியம் ஏற்படுத்தல் பள்ளிகட்டுதல் போன்ற காரணத்தால் புலிகள் கோபடைந்து காத்தான்குடி தாக்குதல் மற்றும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றியமை போன்றவற்றை மேற்கொண்டனர். இது சிங்களவர்களுக்கு எதிராக ஆங்கிலேயருக்கு தகவல் வழங்கியது போல் தமிழருக்கு எதிராக வழங்குவது பயங்கர விளைவு என்பதை முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு தகவலை வழங்கியது.

இதனால்தான் ரவூப் ஹகீம் 2001ம் ஆண்டு புலிகளுடன் சேர்ந்து அரசைக் கவிழ்த்ததும் 2002 ஏப்ரல் 13ம் திகதி புலிகளுடன் ஓப்பந்தம் செய்து கொண்டமை பற்றிக் குறிப்பிடலாம். இவை அவர்களது உயிரைப் பாதுகாக் மேற்கொண்ட நடவடிக்கைகளாகும். முஸ்லிம் காங்கிரஸ் இவ்வளவு தூரம் அநீதி இழைக்கும் போது ஜம்மியத்துல் உலமா எங்கிருந்தது?.2003 ஜனவரி 29ம் திகதி ஒலுவில் பிரகடணத்தைக் கொண்டு வந்து பிரிவினைவாதத்தை மேலும் ஏற்படுத்pனர். இங்கே முஸ்லிம்களுக்கு தனி ராஜ்யம் வேண்டும் என்று சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டது. அஷ்ரப் அமைச்சராக இருந்த போது முழு நாட்டிலும் வினியோகிக்கப்ட்ட புத்தமே முஸ்லிம் நிஜபூமி பற்றிய எண்ணக் கருவைக் கொண்டு வந்தது.

2012ல் ஜெனீவா பிரச்சினையை இஸ்ரவேல் முன்னின்று மேற்கொண்டதால்தான் அரபு நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தனவே தவிர. ஒரு ரிசானாவை விடுதலை செய்யமுடியாத அமைப்பான  ஜம்மியத்துல் உலமாவில் வேண்டுகொளுக்கு அல்ல. 

ஒரு பள்ளி கூட தாக்கப்படவில்லை

புலிகள் முஸ்லிம் பள்ளிகளைத் தாக்கும் போது சிங்கள வீரர்களே பாதுகாத்தனர். கடந்த முன்று வருடத்திலும் ஒரு பள்ளி கூட தாக்கப்படவில்லை. சனத்தொகையைப் பொருத்தவரை ஒவ்வவொரு 30 வருடத்திலும் முஜ்லிம்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் போது  சிங்களவர்கள் அறை மடங்காகக் குறைகின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள்.

இலங்கையில் தீவிரவாத குழுக்கள் தப்லீக்,தவ்ஹீத், ஜமாஅத்தே இஸ்லாமி, தரீக்கா என நான்கு குழுக்கள் உண்டு

நாம் செய்யவேண்டியவை

எதிர்காலத்தில் வெளிநாட்டுப்பணத்தில் பள்ளி கட்டுவது, வெளிநாட்டு சமய பிரசாரர்கள் உள்வருவது, எடிசலாட் போன்ற மத்திய கிழக்கு நாட்டு நிதியினால் உள்ளுர் வர்த்தகத்தைக் கைப் பற்றுவது, போதை கடத்தல், 'வெட்' போன்ற ஏமாற்று வர்த்தகத்தால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு உதவுதல், பணிப்பெண் போர்வையில் மத்திய கிழக்கிற்கு பெண் கடத்தல், கிழக்கு ஆயுதக்குழுக்கள் இயங்குவது, முழுநாட்டிலும் இயங்கும் ஜிஹாத் அமைப்பு, ஆகிய வற்றை தடைசெய்தல் பௌத்த தர்மத்திற்கு முன் உரிமை அளித்தல் ஆகிய நோக்கங்களை அடைய முயற்சிப்போம்.  


2 comments:

  1. ஜா.ஹெ.உ. ஒன்றை விட்டு விட்டீர்கள் அதாவது அறிவான முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ள முஸ்லிம்கள் பாடு படவில்லை அதனால் தான் பொதுபலசேனா பிரச்சினைகளை உருவாக்கி மக்களை தூண்டுகிறது.

    ReplyDelete
  2. மேற்கூறிய விடயங்கள் சம்மந்தமாக முஸ்லிம் புத்திஜீவிகள் சிந்திக்க மாட்டார்களா?.ஒரு பாரிய வரலாற்று திரிவுபடுத்தும் செயலினையே ஜாதிக ஹெல உரிமைய செய்துள்ளது.இப்படியே போனால் முஸ்லிம்களின் வரலாறு மாறிவிடும் அபாயம்தான் ஏற்படும்.

    ReplyDelete

Powered by Blogger.