Header Ads



சுபுஹு தொழுகையின் பின் முஸ்லிம் அமைச்சர்களும், உலமா சபையும் சந்திப்பு



இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நிகழ்கால நெருக்கடி தொடர்பில் இன்று சனிக்கிழமை, 9 ஆம் திகதி சுபுஹு தொழுகையின் பின்னர் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இதனை சந்திப்பில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

அமைச்சர்களான பௌஸி, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோரும், உலமா சபையின் முக்கிய பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இச்சந்திப்பில் ஹலால் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் அரசியவாதிகள் ஹலால் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.