வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம்
(அடம்பனிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஜெனீவாவுக்கு சென்றுள்ள தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவைாயன கல்லை கூட பெற்று்க கொடுத்தார்களா என்பது ஜெனீவாவில் விளக்கப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றியே தீருவோம் என்று சூளுரைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அடம்பன் கிராமத்தில் 300 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட்டத்தை வைபவ ரீதீயாக இன்று ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றம் போது அமைச்ச்ர் மேற்கண்டவாறு கூறினார்.
கைத்தொழில்,வணிக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசுகையில்-
அன்று இடம் பெயர்ந்து மெனிக் பார்ம் நலன் புரி முகாமில் தங்கியிருந்த 3 இலட்சம் தமிழ் மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் மிகவும் கட்சிதமான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.அவர் ஆற்றிய பணிகள் இந்த வன்னி மக்களால் என்றும் நினைவு கூறப்பட வேண்டியுள்ளது.அதனை மறந்து எவராலும் செயற்பட முடியாது.இந்த அரசாங்கம் அவருக்கு நன்றி கூறுகின்றது.
இன்று அமைச்சர் றிசாத் பற்றி சில ஊடகங்கள் பிழையான செய்திகளை வெளியிட்டு வருகின்றதை அவர் என்னிடம் கூறினார்.அரசியல் வாதிகளுக்கு இந்த விமர்சனங்கள் வருவது இயல்பு,அதனை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என நான் கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். சவால்களுக்கும்,தடைகளுக்கும் மத்தியில் தமது பணியினை ஆற்றக் கூடிய தைரியமும்,துணிவும் அமைச்சர றிசாத் பதியுதீனிடத்தில் இருக்கின்றது என்பதை நானிறிவேன்.
அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,தினேஷ் குணவர்தன மற்றும; மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர ஆகியோரும் உரையாற்றினர்.முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அன்டன் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment