Header Ads



சிறுவர் துஷ்பிரயோகம், பண மோசடியில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது


(Vi) பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் என தன்னை கூறிக்கொள்ளும் பௌத்த பிக்கு ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிறுவர் துஷ்பிரயோகம் பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 

'சிறுவர் உலகம் நீயும் நானும்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றினை உருவாக்கி இந்த பௌத்த தேரர் செயற்பட்டு வந்தார். இவர் தங்கியிருந்த மாடிக் கட்டடத்தை எமது பொதுபல சேனாவின் அங்கத்தவர்கள் முதலாம் திகதி இரவு சுற்றிவளைத்து சோதனை செய்த போது, அவரது அறையில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன் இவர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமைக்கான பல ஆவணங்களும் அறையிலிருந்து மீட்கப்பட்டன.

பலவந்தமாக பணம் அறவிட்டமை, தாக்குதல் நடத்தியமை தொடர்பிலும் இவர் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அத்துடன் 12 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இவர் தங்கியிருந்த இடத்தினைச் சோதனையிட்ட எமது பொதுபல சேனாவின் இளைய பிக்குகள், பின்னர் இவருடைய காவியுடையை அகற்றி மாளிகாவத்தை பொலிஸில் ஒப்படைத்தனர்.

1 comment:

  1. என்னவாம் அவங்க "வத்தையயும்" (தோட்டம்) சுத்தம் செய்றாங்களாம்.. இவனுங்கலத் தவிர மத்த எல்லாரும் லூசு எண்டு நினச்சிட்டு இருக்கானுகள்..

    ReplyDelete

Powered by Blogger.