முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்க புதிய வெளிவிவகார அமைச்சர் சுற்றுப்பயணம்
அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரியாக ஜான் கெர்ரி பதவி ஏற்றுள்ளார். அதை தொடர்ந்து அவர் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார். இந்த நிலையில் துருக்கியில் இருந்து புறப்பட்ட அவர் 2 நாள் பயணமாக நேற்று எகிப்து வந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் எகிப்தில் சூயல் கால்வாய் பகுதியில் உள்ள போர்ட் நகரில் கலவரம் வெடித்தது. அப்போது, கலவரக் காரர்கள் சுமார் 500 பேர் அங்குள்ள போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதன் மீது கல்வீசி தாக்கினார்கள்.
பெட்ரோல் குண்டுகளையும் வீசினார்கள். இதனால் போலீஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அங்கு தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனத்தை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று போராட்டக்கார்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, எகிப்து சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி அந்நாட்டு அதிபர் முகமது முர்சி, அரசியல் கட்சி தலைவர்கள், வர்த்தகர்கள், மற்றும் சமூக நல ஆர்வலர்களை சந்திக்கிறார். ஆனால் இவரை முக்கிய எதிர்கட்சி தலைவர்களான முகமது எல்பராடி, ஹம்தீம் ஷபாய் ஆகியோர் சந்திக்க மறுத்து விட்டனர். வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Post a Comment