Header Ads



முஸ்லிம்களின் போராட்டம் குறித்து விக்ரமபாகு கருணாரட்ன..!



முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களைக் கண்டித்து திங்கட்கிழமை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினை முறியடிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாகவும் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்படலாமெனவும் நவசமசமாஜக் கட்சியின்  பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ; முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சம்பவங்களைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடியும் அலுவலகத்துக்கு செல்லாமலும் சகல செயற்பாடுகளிலுமிருந்து விலகியும் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஹர்த்தாலினை முறியடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.  

இந்த ஹார்த்தாலினை ஏற்பாடு செய்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட இடமுண்டு. ஏற்கனவே  முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த முஸ்லிம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலிமீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் போராட்டத்துக்கு நவசமசமாஜக் கட்சி தனது பூரண ஆதரவினை வழங்கும். 

இப்போராட்டத்தினை முறியடிப்பதற்கு தாக்குதல் நடத்தப்படுமாயின் நாடு தழுவிய ரீதியில் தொடர்போராட்டங்கள்  மேற்கொள்ளப்படும். எனவே ஜனநாயகரீதியான போராட்டத்துக்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. Great Educationist fights for Justice and Peace

    ReplyDelete
  2. Sir first go to saloon and change ur hair cut and body coat

    ReplyDelete

Powered by Blogger.