Header Ads



கடல் உளவு நடவடிக்கையில் 'ரோபோ' ஜெல்லி மீன்


கடல் கண்காணிப்பு பணியில் 'ரோபா' ஜெல்லி மீனை ஈடுபடுத்தி இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷசாங் பிரியா. பிளாக்ஸ்பர்கை சேர்ந்த இவர் விர்ஷினியா தொழில் நுட்ப கல்லூரியில் மெக்கானிக் என்ஜினீயரிங் பேராசிரியராக பணிபுரிகிறார்.

இவர் தலைமையிலான குழுவினர் ரோபோ எந்திர ஜெல்லி மீன் தயாரித்துள்ளனர். 5 அடி 7 இஞ்ச் நீளமும், 170 பவுண்ட் எடையும் கொண்டது. இதற்கு சைரோ என பெயரிட்டுள்ளனர்.

எந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஜெல்லி மீன் தானாக சுதந்திரமாக இயங்க கூடியது. இதன் மூலம் கடல் பகுதியை மிகவும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இது உளவாளியாக செயல்படுவதால் கடலுக்குள் புதிதாக நுழைபவர்கள் பற்றியும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை, கடல் மட்டத்தின் அளவு போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.