Header Ads



தேசத்திற்கு மகுடம் கண்காட்சி - காட்சிக்கூடத்தை திறந்தார் அமைச்சர் அதாஉல்லா


(ஜே.எம். வஸீர்) 

அம்பாரையில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினதும் அதன் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தினதும் காட்சிக் கூடங்களை தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருக்கும் ஆவணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். 

இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் காட்சிக் கூடத்தில் உள்ளுராட்சி சபைகளின் நிதி, நிர்வாகம் மற்றும் சட்டப்புத்தகங்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் காட்சிக்கூடத்தில் அமைச்சினால் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திட்டங்கள் சம்பந்தமான விடயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வின்போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஐ.ஏ. ஹமீட் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் செயற்திட்டங்களின் செயற்திட்டப்பணிப்பாளர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வின்போது கலந்து சிறப்பித்தனர்.  


2 comments:

  1. ஒரு மன்னனின் மகுடம்.

    உலக வரலாற்றில் அக்கரைப்பற்று மக்கள் முறியடிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர்கள் என்பதில் இலங்கையர் நாமும் பெருமை கொள்வோம்.

    இலங்கையை மஹிந்த எனும் முடிசூடா மன்னன் தேர்தல் முறை மூலம் ஆட்சிபுரிவதுபோல், அக்கரைப்பற்றில் முடிசூடிய மன்னனும், இளவரசனும் (மன்னனின் மகன்) தேர்தல் முறை மூலம் ஆட்சிபுரிகிறார்கள். இது எங்கும், எப்போதும் நடந்ததே இல்லை.

    அதனால் தான் ஒரு வேண்டாத மன்னனுக்குரிய இயல்பிலேயே வளர்ந்த அம்மன்னன் சமூகத்தைப்பற்றிய அக்கறையின்றி கலை விழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், இசை கச்சேரிகள், ஊர்வலங்கள், குதிரையேற்ற பயிற்ச்சிகலென அரங்க்கேற்றிகொண்டிருக்கிறார்.

    சுருக்கமாக சொல்வதென்றால் அக்காமாலா, கப்சி போன்ற பானங்கள் பருகும் 23 ம் புலி கேசி.

    ReplyDelete

Powered by Blogger.