Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இந்திய வீடமைப்பு - அறிவூட்டும் விஷேட ஒன்றுகூடல்


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் தொடங்குகின்றோம்.

அன்புமிக்க யாழ்ப்பாணத்தின் உறவுகளே! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாக மக்களை அறிவூட்டும் விஷேட ஒன்றுகூடல்

புத்தளம் – 20- மார்ச்- 2013 புதன் கிழமை நேரம் –  பி.ப. 4.00 
இடம்; தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயம்

நீர்கொழும்பு- 21- மார்ச் 2013 வியாழக்கிழமை பி.ப. 4.15 மணி 
இடம் : ஆலமுல் இஸ்லாம் மண்டபம்

அல்லாஹ்வின் ஏற்பாட்டின் அடிப்படையில் 1990களில் எம்மீது ஒரு அநியாயம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அல்லாஹ் எமது உடமைகளையும் உரிமைகளை பறிகொடுத்த நிலையில் எம்மை உயிரோடு யாழ்ப்பாணத்தைவிட்டும் வெளியில் வருவதற்கு வாய்ப்பளித்தான், இப்போது அவனே எம்மை மீண்டும் எமது தாய் மண்ணில் குடியேறுவதற்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கின்றான் அல்ஹம்துலில்லாஹ். 

யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் யாழ் முஸ்லிம் சமூகத்தை மீளக்குடியமர்த்துவதற்கு எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாக தற்போது 342 ற்கும் அதிகமான வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்திய வீட்டுத்திட்ட உதவியின் மூலம் உருவாகியிருக்கின்றது. இது எமக்குக் கிடைத்த ஒரு பாரிய பாக்கியமாகும், யாழ் முஸ்லிம் வட்டாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க எமது பூமியில் பழைய நிலைமைகளை உருவாக்க, எமது காணி நிலங்களின் பெறுமதியை அதிகரித்துக்கொள்ள என பல வழிகளிலும் எமக்கு இது வாய்ப்ப்பாக அமைந்திருக்கின்றது.

இதற்கான விண்ணப்பங்கோரும் நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பிரதேச செயலகம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகின்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம், மேற்படி விடயத்தை நாம் உயர் மட்டங்களுக்கும் அறிவித்திருக்கின்றோம், 

2013 பெப்ரவரி 18, பெப்ரவரி 24, மற்றும் மார்ச் 09 ஆகிய தினங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற தொடரான சந்திப்புகளின் விளைவாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை நேரடியாக யாழ் ,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது. எனவே யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை சேகரிப்பதற்கும். மேலதிக விபரங்களை மக்களுக்கு வழங்குவதற்குமாக மக்கள் சந்திப்பொன்றை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஒழுங்கு செய்திருக்கின்றது. 

பல்வேறு கட்டங்களில் பலமாதரியான விண்ணப்பங்களை எமது மக்கள் சந்ந்தித்திருக்கின்றார்கள், அவற்றினூடாக நாம் நன்மையடைகின்றோம். ஆகக்குறைந்தது எமது சமூகத்தின் தரவுகளாகவது ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்திய வீட்டுத்திட்ட விண்ணப்பங்கோரலானது நம்பிக்கையூட்டும் விதமாக இருப்பதுடன்  சர்வதேச ஈடுபாட்டினையும் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இம்முறை கோரப்பட்டுள்ள விண்ணப்பமானது ஏனைய விண்ணப்பங்களைவிட வித்தியாசமானது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்திய வீட்டுத்திட்ட விண்ணப்பத்தில், யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்தலுக்காக பதிவுகளை மேற்கொண்ட, சொந்தமான காணிகளைக்கொண்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் பெறுவோர், என சகல தரப்பினரும் உள்வாங்கிக் கொள்ளப்படவுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்க. இவ்வாறாக பல்வேறு விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கூடிய இத்திட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்து பயன்பெறவேண்டும் என்பது எமது விருப்பமாகும்.

இன்ஸா அல்லாஹ் எதிர்வரும் 20ம் திகதி புத்தளத்திலும் 21ம் திகதி நீர்கொழும்பிலும் மேற்படி விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் இடம்பெற இருக்கின்றன. எனவே மேற்படி ஒன்றுகூடலில் கலந்து பயன்பெறுமாறு அனைத்து யாழ்ப்பாண உறவுகளையும் அன்போடு அழைக்கின்றோம் 

“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் போக்குகளை  மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களின் நிலைமைகளை மாற்றிவிடுவதில்லை 

அல் குர்ஆன் - ஸூரத்துல் அன்ஃபால்: 53வது அத்தியாயம்.

ஏற்பாடு: யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம். 

No comments

Powered by Blogger.