ஐரோப்பாவில் புவிஈர்ப்பு விசையற்ற விமானப் பயணம் அறிமுகம்
விண்வெளி வீரர்களைப் போல் காற்றில் மிதக்கும் அனுபவத்தை ஒரு நிறுவனம் பயணிகளுக்கு அளிக்கிறது. ஐரோப்பாவின் நோவேஸ்பிஸ் என்ற நிறுவனம் புவிஈர்ப்பு விசையற்ற விமானங்களில் மனிதர்களைப் பறக்கவிட்டு அவர்களுக்கு இந்த அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இத்தகைய பயணங்கள் நடைபெற்று வந்தாலும், ஐரோப்பாவில் இப்போதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது.
விண்வெளி வீரர்கள்போல் உடையணிந்த பயணிகள், விமானத்தின் உள்ளே நுழைந்ததும் புவிஈர்ப்பு விசை இல்லாத நிலையில் 22 நொடிகள் அந்தரத்தில் பறக்கும் நிலையை அனுபவிக்கிறார்கள். மேலும், அவர்களால் விண்வெளி வீரர்கள்போல் மிதக்கவும் முடிகிறது.
இந்தப் பயணத்திற்கான கட்டணம் 5000 பவுண்டு (இந்திய ரூபாயில் சுமார் 4 லட்சம்) என்ற போதிலும், 2014-ம் ஆண்டு இறுதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பயணத்திட்டம் மக்களிடையே பிரபலமாகியிருப்பதை அறியமுடிகிறது.
Post a Comment