ஜெனீவாவில் மோதிய அமெரிக்காவும் இலங்கையும்
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை வளாகத்தில் நேற்று அமெரிக்காவும் சிறிலங்காவும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்தியுள்ளன.
ஆசிய குழுவின் சார்பில் முஸ்லிம் நாடான ஜோர்தான் ஒழுங்கு செய்த கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க, போருக்குப் பிந்திய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்னொரு அறையில், அமெரிக்கா ஒழுங்கு செய்த கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எலீன் சேம்பர்லைன் தலைமையிலான அமெரிக்க குழுவினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானம் குறித்து உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
அதேவேளை அமெரிக்கத் தீர்மானம் குறித்த முறைப்படியான பதிலை அமைச்சர் மகிந்த சமரசிங்க நாளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
this is time testing for muslim countries they should not sport be avoided whatever problem sri lanka faces. now the second genocide of muslim on the way.
ReplyDelete