Header Ads



இதய நோய் ஆபரேசனுக்கு பதிலாக புதிய சிகிச்சை வருகிறது


வால்வுகள் அடைப்பு, சீரில்லாத இருதய துடிப்புகள், இருதயத்தில் ஓட்டைகள் உள்ளிட்ட பல இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை (ஆபரேசன்) மூலம் குணமாக்கப்பட்டது. 

மார்பு எலும்புகளை திறந்து அதன் பின்னர் ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதனால் கடுமையான வலி மற்றும் அறுவை சிகிச்சையின் போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. ஆனால் இது போன்ற அறுவை சிகிச்சைகள் இன்றி புதிய மருத்துவ முறை தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இருதய நோயாளியின் கால் அல்லது தோள் பட்டையில் உள்ள ரத்த நாளங்களில் சிறு துளையிட்டு அதன் வழியாக குழாய்களை செலுத்தி அதன் மூலம் வால்வுகள் அடைப்பு, இருதய ஓட்டையை சரி செய்தல், சீரில்லாமல் இயங்கும் இருதய துடிப்பு போன்ற வற்றை சரி செய்ய முடியும். 

தற்போது இது நடைமுறையில் இருப்பதாக அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் டாக்டர் ஸ்பென்சர் கிங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இவர் அமெரிக்கன் கல்லூரி இருதய பிரிவின் தலைவராக இருந்தார். 

இந்த சிகிச்சையை 90 வயது முதியவருக்கும் செய்ய முடியும். அறுவை சிகிச்சை மூலம் உடலில் பெரிய அளவில் காயம் படாததால் ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். இருதய ஆபரேசனுக்கு அதிக அளவில் செலவு ஏற்படாது. 

No comments

Powered by Blogger.