Header Ads



ஒழுக்காற்று விசாரணையை புறக்கணித்த அப்துல்காதர்


சுற்றாடல் பிரதி அமைச்சர் அப்துல்காதர் சம்பந்தமாக ஐக்கிய தேசிய கட்சி ஒழுக்காற்று 09-03-2013 விசாரணையை மேற்கொள்ளவிருந்தது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், அவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி ஒழுக்காற்று விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது.

எனினும் இன்றைய ஒழுக்காற்று விசாரணைக்கு அப்துல்காதர் முன்னிலையாகவில்லை.  இதற்கு பதிலாக அவர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்தில் தமது உடல்நிலை சரியில்லாத நிலையில், மூன்று தினங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.