பாகிஸ்தானில் இராணுவ வீரர் கற்களால் எறிந்து படுகொலை
இளம் யுவதியொருவருடன் காதல் உறவைப் பேணிவந்தவர் என்ற குற்றச்சாட்டில் படைவீரர் ஒருவர் கற்களால் எறிந்து கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. வடமேற்கு பிராந்தியத்தில் பழங்குடியினத்தவர்களின் உத்தரவின்பேரில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஷியா மதப்பிரிவைச் சேர்ந்த பெண் சன்னி மதப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரருடன் தொடர்பினைப் பேணிவந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இவ்விடயம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளால் எக்கருத்தும் வெளியிடப்பட்டிருக்கவில்லை
புதன்கிழமை ஆப்கானிஸ்தானின் குர்ராம் மாவட்ட எல்லைக்கருகிலேயுள்ள பரசினார் நகரிலுள்ள உள்ளூர் பழங்குடியின் சபையொன்று அப்பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்ணுடன் சட்டத்துக்குப் புறம்பான உறவைக் வைத்திருந்ததாகக் கூறி 25 வயதான அன்வர் உட்டினுக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேறியது.
பாகிஸ்தானில் கடந்த வருடம் 400 இற்கு மேற்பட்ட ஷியா மத பிரிவினர் கொல்லப்பட்ட அதேவேளை இவ்வருடம் இதுவரையிலான காலப்பகுதியில் 200 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இளம் யுவதிக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக வதந்திகள் பரவிவருகின்றபோதிலும் உண்மை விபரம் வெளியிடப்படவில்லை.
இதுபோன்ற சம்பவங்களால் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். ஆனால் கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்படுகின்றமை அபூர்வமாகும்.
Post a Comment