Header Ads



பாராளுமன்றத்திற்குள் ஜீன்ஸ், பேண்ட், டிஷர்ட் அணிந்துசெல்ல தடை



ரஷ்ய எம்.பி.க்கள் ஜீன்ஸ் பேண்ட், 'டி' ஷர்ட் ஆகியவற்றை அணிவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் தடை விதித்துள்ளது.

ரஷ்ய பாராளுமன்றத்தின் நல்லொழுக்கம் கமிட்டி தலைவரும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் தலைவருமான அலெக்சாண்டர் டெக்ட்யாரேவ், 'பாராளுமன்றம் என்பது பொழுதுபோக்கு கூடம் அல்ல. ஜீன்ஸ் கூட பேண்ட்டைப் போன்ற ஒரு உடை தான். எனினும், ஜீன்ஸ் பேண்ட் - 'டி' ஷர்ட் அணிந்து அதன் மீது ஒரு மேலங்கியை போட்டுக்கொண்டு வரும்போது, அது 'சூட்' அணிவதைப் போன்ற ஒரு கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்துவதில்லை.

சில எம்.பி.க்கள் அரசியல் ரீதியான மறைமுக விமர்சனங்கள் அடங்கிய வாசகங்களை அச்சிட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு பாராளுமன்றத்துக்குள் நுழைகின்றனர்.

இதை போன்ற சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் எம்.பி.க்கள் இனி ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட்களை பாராளுமன்றத்துக்குள் அணிந்து வரக்கூடாது' என கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.