தமிழ் பத்திரிகை சொந்தக்காரர்களே என்னை இனவாதியாக சித்திகரிக்கின்றனர்
(அஸ்ரப் . ஏ. சமத்)
இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுமின்றி ஒரு தாய் நாட்டு மக்கள்போல் ஜக்கியமாக அண்மைக்காலமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருனாநிதிகளைப் போன்றவர்கள்தான் ஒன்று சேர்ந்து இலங்கையில் மீண்டும் ஒரு இனப்பகைமையை ஏற்படுத்தி இந்த நாட்டினை ஒரு நெருப்பு புகையை ஏற்படுத்தி மக்களிடையே இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல முற்படுகின்றனர். அதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குளிர்காய முற்படுகின்றனர்.
மேற்கண்டவாறு மாத்தளை ரோஸ்வத்தையில் 38 பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்புத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் அங்கு உரையாற்றுகையில்,
இந்த உலகில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு தணியான தமிழ்ஈழ நாடு தேவையென்றால் அது இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரலா தமிழ்நாடு போன்ற பிரதேசத்தை கொண்ட தனியாணதொரு தமிழ்ஈழ நாடு உருவாக வேண்டும். அங்குதான் உலகில் உள்ள தமிழ் மக்களது பாரம்பரியம், இந்து மத வரலாறு. கலை கலாச்சாரம், மொழிகள் கொண்டதொரு தமிழ் மாநிலங்களாகும். இதற்காகவே தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் முதலில் தமக்கென ஒரு தமிழ்ஈழத்தை உருவாக்க போராட வேண்டும். இதற்குத் தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவிலும் ஐக்கியநாட்டுச் சபையிலும் போரடவேண்டும்.
இந்தியாவில் இதனைச் செய்யமுடியாமல் இலங்கையில் ஒரு தமிழ்ஈழம் உருவாவதற்கு அவர்கள் குரல்கொடுப்பது ஒரு கோழைத்தனமானதெரு செயலாகும். இலங்கையில் மீண்டும் ஒரு தமிழ் ஈழம் உருவாக நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
இங்கு எனக்கு முன் உரையாற்றிய அம்பகன் பிரதேச உப தலைவர் நாகப்பன் யோகராஜ் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் ஊடகங்களில் விமல் வீரவன்சவா அவர் ஒரு ஜே.வி.பி அடிப்படைவாதி அவர் ஒரு இனவாதி என சித்தரிக்கின்றனர். எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித் அமைச்சர் விமல் - என்னை இந்த நாட்டில் உள்ள தமிழ் செய்திப் பத்திரிகைகள் என்னை ஒரு இனவாதியாக நாளாந்தம் எழுதித் தள்ளுகின்றனர்.
இந்தப் பத்திரிகைச் சொந்தக்காரர்கள் செயல்படுவதும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் அல்லது தமிழ்த்தேசிய முன்னணியின் தலைவர் இரா சம்பந்தன் அல்லது சுமேந்திரன் அகியோரின் நிகழ்ச்சி நிரல்களுக்குகேற்ப என்னை ஒர் இனவாதியாக சித்தரிக்கின்றனர். அப்படியென்றால் முழு நாட்டுக்கும் நான் எப்படியானவன் என்று இன்று இங்கு நடைபெறும் நிகழ்வு சான்று பகரும். இன்று 38 தமிழ் குடும்பங்களுக்கும் காணித்துண்டுகளும் வீடுகள், ஹிந்து கோவில், வசதிகள் கொண்ட ஒர தமிழ் கிராமமொன்றை உருவாக்கும் விமல் வீரவன்ச ஒரு இனவாதியா எனக் கேள்வியெழுப்பினார் ? நான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபகரணை விமர்சித்தால் நான் ஒரு இனவாதியா ? தமிழ் பத்திரிகையின் சொந்தக்காரர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே என்ணை இவாதியாக எழுதுகின்றனர். எனவும் விமல் வீரவன்ச தெரவித்தார்.
mr. wimal we know you you are,,,, your are a dirty and fillthy racist and communilist please do not shower ice water over the tamil people we know now you are afraid of tamil nadu
ReplyDelete