இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சதி - தடுக்குமாறு பிரிட்டன் வாழ் இலங்கையர் கோரிக்கை
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஜக்கிய ராஜ்யத்தினை தளமாக கொண்டு செயற்படும் இன்டநேசனல் அலெட் அமைப்பின் அழைப்பி்ன் பேரில் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு முதன் முறைாயக தெரிவு செய்யப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜக்கிய ராஜியத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவில் அங்கு சென்றுள்ள வன்னி மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இந்த தகவலை அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
ஜக்கிய ராஜ்யத்தில் உள்ள புலம் பெயர் அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இதன் போது தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் அமைப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.யுத்தத்தின் பின்னர் இலங்கையின் அபிவிருத்தி நிலை குறித்து புலம் பெயர் தமிழ்,சிங்கள,முஸ்லிம் அமைப்பக்களை சந்தித்து நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
அதே வேளை வடக்கில் அபிவிருத்தியினை போன்று நியமனங்கள் அதிகமாக அங்குள்ள இளைஞர்,யுவதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோறிக்கையினையும் இந்த அமைப்பினர் இக்குழுவினரிடம் முன்வைத்துள்ளதாகவும்,தமது விஜயத்தின் முழுமையான அறிக்கையொன்றை .இலங்கை ஜனாதிபதி மற்றும் துாதரகங்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்.
அதே வேளை ஜக்கிய ராஜ்யத்தில் உள்ள முஸ்லிம் பிரதி நிதிகள்அங்குள்ள மஸ்ஜிதில் வைத்து தம்மை சந்தித்து தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படம் சதி திட்டங்கள் குறித்து காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
எதிர்வரும் 12 அம் திகதி இந்த குழுவினர் இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment