Header Ads



சீ.எம்.ஏ. அமீன் எழுதிய 'இந்து மதம்- பௌத்தம்- இஸ்லாம் ஓர் ஒப்பீட்டு ஆய்வு"

(எம். ஜே.எம். தாஜுதீன்)

பன்னூலாசிரியர் சீ.எம்.ஏ. அமீன் எழுதிய 'இந்து மதம்- பௌத்தம்- இஸ்லாம் ஓர் ஒப்பீட்டு ஆய்வு" என்ற தலைப்பிலான நூல் வெளியீடு எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திஹாரியில் நடைபெறும்.

திஹாரி 'லப்சன்" வரவேற்பு மண்டபத்தில் மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை நடைபெறும் இந்த வைபவத்துக்கு ஏ.ஆர்.ரிஸ்வி மொஹமட் தலைமை வகிப்பார்.

ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் நூல் விமர்சனம் செய்வார்.

விழாவின் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி சரத் பெரேரா 'இனங்களுக்கிடையில் நல்லுறவு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

சமயங்களுக்கிடையிலான ஒப்பீட்டாய்வு நூலொன்று தமிழ் மொழியில் வெளிவருவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.