அப்பிளிடம் தோற்றம் சம்சுங்
அமெரிக்காவின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான ஆப்பிளுக்கும், தென்கொரியா கம்பெனியான சாம்சங்கிற்கும் தொழில் குறித்த போட்டிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. சாம்சங் நிறுவனம் தங்களது தொழில்நுட்பத் திறமையை பயன்படுத்துவதாக 2011-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தது.
இதில் பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக ஆப்பிள் நிறுவனம் பெற்றது. அதிலிருந்து இத்தகைய வழக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவைத் தவிர பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, இத்தாலி, தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த இரு கம்பெனிகள் குறித்த வழக்குகள் தற்போது நடந்து வருகிறன்றன.
கடந்த வாரம், ஜப்பானில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனைத் தடை செய்யக்கோரி சாம்சங் தொடர்ந்த வழக்கு ஆப்பிள் கம்பெனிக்கே சாதகமாக முடிந்தது. தற்போது இங்கிலாந்தில், 3ஜி ஸ்பெக்ட்ரத்தில் தகவல் பெற ஆப்பிள் உபயோகிக்கும் தொழில்நுட்பம் தங்களுடைய 3 காப்புரிமைகளை ஒத்துள்ளது என்று தொடர்ந்திருந்த வழக்கும் சாம்சங்கிற்கு எதிரான முடிவைத் தந்துள்ளது. இது ஏமாற்றம் அளிப்பதால் மேல்முறையீட்டு மனு குறித்து அக்கம்பெனி யோசித்து வருகிறது.
பல்லாண்டு காலங்களாகத் தொடர்ந்து நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடிகளாக இருப்பது தங்களுடைய கம்பெனியின் வெளியீடுகள் மூலம் தெரியும் என்று சாம்சங் கம்பெனியின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Post a Comment