Header Ads



முஸ்லிம் சகோதரியின் பர்தாவை அகற்ற முயற்சி - பொலிஸில் முறைப்பாடு


முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தா இனந்தெரியாத குழுவினரால் இன்று திங்கட்கிழமை 18-03-2013 காலை அபகரிப்பதற்கான முயற்சியொன்று மன்னம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் தபாலக அதிபராக பணி புரியும் பெண்ணின் பர்தாவையே இனந்தெரியாத குழுவினரால் அபகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள தபாலகத்திற்கு நடந்து செல்லும்போதே மன்னம்பிட்டி பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளிலில் வந்த இந்த குழுவினர் தலைகவசம் அணிந்திருந்தமையினால் குறித்த பெண்ணினால் இந்த குழுவினரை இனங்காண முடியாது போயுள்ளது. மன்னம்பிட்டி தபால் நிலைய தபால் அதிபராக கடந்த பெப்ரவரி மாதம் இந்த பெண் நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வேலை முடிந்து திரும்பும்போதும் ஒரு குழுவினரால் பர்தாவை கழற்றுமாறு இந்த பெண் வேண்டப்பட்டுள்ளார்.எனினும் இதனை குறித்த பெண் கவனத்திற்கு கொள்ளவில்லை. இதனையடுத்தே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மன்னப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாண தபால் மா அதிபரின் கவனத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீர் அலி கொண்டுவந்துள்ளார்.

5 comments:

  1. இப்படியான நிகழ்வுகள் நடக்குமென்று எல்லாருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சம்பவங்கள் சமுதாய அளவில் ஒரு இரத்த கொதிப்பை ஏற்படுத்துகறது. இதன் விளைவுகளை இந்த சிங்கள காடையரகள் சிந்திக்க மறுக்கிறார்கள். இதன் அர்த்தம் என்ன என்று புரிகிறது. இலங்கை தீவில் சிறுபான்மை இனஙகளை இந்த நூற்றாண்டில் போர்கள் மூலம் அழித்தொழிக்கலாம் என்ற ஒரு நப்பாசை. இவர்கள் மாபெரும் உயிர் மற்றும் பொருளாராத அழிவுகளை பரிசில்களாக பெறப்போகிறார்கள்.

    ReplyDelete
  2. SISTER,
    WE MUST COMPLAINT IT AT POLICE AND OUR ACJU FOR THEIR FURTHER ACTIONS. AND WE SEND THE MESSAGE TO VIP SINHALA PEOPLE RELEVENT AREA ALSO.

    ReplyDelete
  3. அன்புச் சகோதரிகளே! இது எமக்கு சோதனையான காலம். எனவே நாம் வெளியில் செல்லும் போது ஆணின் துணையில்லாமல் காலெடுத்து வைக்க வேன்டாம். .இது எமது மார்க்கத்தின் கட்டளை. அதை புறக்கனித்துத்தான் இவ்வளவு காலமும் பழகிவிட்டோம். எமது பழக்கத்தோசத்தினை இனியாவது மாற்றிக் கொள்வோம் சகோதரிகளே.

    ReplyDelete
  4. துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால் சகோதரர் "தஸ்னீம்" இனது ஆலோசனை நீங்கள் உட்பட எல்லா சகோதரிகளுக்கும் எப்பொழுதும் தேவையான புத்திமதி.

    ReplyDelete
  5. தேவை இஸ்லாம் பற்றிய விளப்புணர்வு,இஸ்லாம் பற்றிய விளப்புணர்வு, இஸ்லாம் பற்றிய விளப்புணர்வு

    ReplyDelete

Powered by Blogger.