Header Ads



முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி


2013 மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04.31 மணிக்கு முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி எனும் சிறுகதைத் தொகுதி கொழும்பு 13 சீகிறஸ்ட் வரவேற்பு மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. பேராசியர் துரை மனோகரன் தலைமையில் இடம்பெறவிருக்கும் இவ்விழாவில் புரவலர் ஹாஸிம் ஒமர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதுடன் முதற்பிரதியையும் பெற்றுக் கொள்வார். அத்துடன்  நூலின் அறிமுகத்தினை மு.தயாபரன் அவர்களும் நூலாய்வுரையை எம்.சீ. ரஸமின் அவர்களும் வழங்குவார்கள். ஏற்புரையை முஸ்டீன் அவர்கள் நிகழ்த்த, ஷாமிலா ஷெரீப் அவரகளால் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படும். 

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுதி மிக முக்கியமானதும் அவசியமானதுமான தருணத்தில் வெளிவருகின்றது, மொத்தமாகப் பன்னிரெண்டு கதைகள், 1985ல் அக்கரைப்பற்றில் சுட்டுக் கொல்லப்பட்ட ராபி, ஓட்டமாவடி வாழைச்சேனைப்பகுதியில் 2002 யுத்த நிறுத்த காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அஸீஸ், அதுபோல  கேர்ணல் லத்தீப், எல்ரீரீ புஹாரி, கொமெய்னி முஸ்தபா, ஏறாவூரில் தொழுது கொண்டிருந்த போது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட அப்துஸ்ஸமது மற்றும் காத்தான் குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட சித்தீக், மேலும் ஓட்டமாவடிப் பகுதியில் கடத்தப்பட்ட ராபாய் என்றழைக்கப்டும் இல்லியாஸ் பற்றிய கதை, 2009களில் காவத்தமுனையில் தோண்டப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பற்றிய கதை  மற்றும் மத்ரசாக்களில் சிறுவர்களைத் தன்னினச் சேர்கைக்கு உட்படுத்தும் மொலவிகள் பற்றிய கதையுடன் ஹராங்குட்டி சிறுகதைத் தொகுதி வெளிவருகின்றது. இதன் அறிமுகவிழா சாய்ந்தமருது தடாகம் இலக்கியவட்டத்தினால் ஏப்ரல் மாதமளவில் நடாத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இத்தொகுதி முஸ்லிம்களிடம் ஆயுதக் குழுக்கள் இருந்தனவா? அவை எப்படி யாரால் வழிநாடாத்தப்பட்டன? ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தன, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற முஸ்லிம் ஜிஹாதிய வீரர்கள் பற்றிய உண்மைத் தன்மை என்ன? என்பன குறித்து தெளிவான உண்மைகளை அதிர்ச்சிகளோடு முன்வைக்கும் காத்திரமான தொகுதி, 

7 comments:

  1. சில தலைப்புக்கள் ஏதோ "தவளை தன் வாயால் கெடும்" என்பது போல் உள்ளது.
    முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் "ஹராங்குட்டி" யாக இல்லாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  2. தலைப்பு நன்ராயில்லை.எழுத்து, பேச்சு,செயல்பாடு அனைத்திலும் நல்லவைகலே பயன் படுத்தப் பட வேண்டும். இதுதான் இச்லாம்.இதே கருத்தைக் கூரும் ஏனைய சொட்கல் இருக்கின்ரன. அவைகலை பயன் படுத்தலாம். இன்ரைய காலத்தில் இலங்கை முஷ்லிம்கல் எதிர் நோக்கும் பல பிரவச்சினைகலுக்கு bbs,ஹெல உருமய காரணமாய் இருக்கின்ரன.அவ்வாரானவர்கலின் செய்திகல் தினந்தோரும் வெப் தலங்கலில் வருகின்ரன. பலரும் பதில் கருத்துக்கல் எழுதுகின்ரனர். தேரர்கலுக்கோ பொவ்த்தர்க்ச்லுக்கோ ஹராங்குட்டி என்ர சொட்கல் பாவிக்கப் பட்டதை கண்டதில்லை.காரணம் நட்பன்பு தான். பேசுவதர்க்கே இது தவிர்க்கப் பட வேண்டி இருக்கும் போது அச்சு மூலம் புத்தக வடிவில் எப்படி வர் முடியும். எழுத்துலகில் இருப்பவர்க்கு இது புரியவில்லை என்பது தான் புதுமை

    ReplyDelete
  3. இந்தப் புத்தகத்திற்கு ஒரு நாகரிகமான பெயர் இட்டிரிக்கலாம்!!!

    கேட்கவே அசிங்கமான சொல்லை ஒரு புத்ததகத் தலைப்பாக்கி இருக்கிறார்!

    தமிழில் தட்டுப்பாடில்லை என்பதை எழுத்தாளர் அறிவார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. நாட்டில் குழப்பங்களும், இனவெறி பிடித்தவர்களின் அடாவடித்தனங்களும் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு சில மத்ரஸாக்களில் நடக்கும் தவறுகளை சந்திக்குக் கொண்டு வருவதால் நீங்கள் அடையும் இலாபம் என்ன? மனிதன் செய்யும் தவறுகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான். அதில் இரு கருத்துக் கிடையாது. ஆனால் அதனை அம்பலப்படுத்தாது குற்றவாளிகளை அணுகி நல்லுபதேசம் புரிவதே இஸ்லாம் காட்டும் உயரிய பண்பு.
    ''யார் பிற முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றானோ அவனது குறைகளை இறைவன் ஈருலகிலும் மன்னிப்பான்'' (ஸஹீஹ் முஸ்லிம்).
    பிறர் குறைகளைத் துருவித்துருவி ஆராயாதீர். யார் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராய்கின்றானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவி ஆராய்ந்து வீட்டின் நடுவில் அவன் மறைந்திருந்தாலும் இறைவன் அவனைக் கேவலப்படுத்துவான்'' (திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்)
    இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் மவ்லவிமார்களை நேரில் சென்று தட்டிக் கேட்பது அவசியம் என்றே கருதுகின்றேன்.

    உங்கள் புத்தகத்துக்கு மக்கள் அசிங்கமாகக் கருதும் பெயரொன்றையே வைத்துள்ளீர்களே. வேறு பெயரே கிடைக்கவில்லை போலும்.
    மீள்பரிசீலனை செய்யுங்கள்.

    ReplyDelete
  5. இந்த நேரத்தில் இந்த புத்தகம் தேவை இல்லை என்று நினைகின்றேன். முஸ்டீன் அவர்கள் Bodu Bala Sena விற்கு இன்னும் சில செய்திகளை சொல்லி மேடைகளில் பேச வைக்கபோகிறார் போலும். ஹம்பயா, மறக்கலையா, தம்பியா யுடன் "ஹராங்குட்டி" என்ற பெயரும் சேரப்போகின்றது என்பது உறுதி. இதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. Musdeen is real harangutty....kilakku kaaranukku putti mattamtaan...

    சிறுவர்களைத் தன்னினச் சேர்கைக்கு உட்படுத்தும் மொலவிகள் பற்றிய கதை- idu tevaya? he doesn't know that what have to right in this situation.

    ReplyDelete
  7. ஹராங்குட்டிகளுக்கு ஹராங்குட்டிப் புத்திதான் வரும். போயும் போயும் ஜப்னா முஸ்லிம். கொம் இந்த விளம்பரத்தைப் போட எப்படி மனம் வந்ததோ நாமறியோம். மிக நிதானமாக கடந்து செல்ல வேண்டிய ஒரு காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள். போதாததற்கு செய்ய வேண்டியதையும் செய்து விட்டு காவத்தமுனையில் புதை குழி தோண்டியவரே அது பற்றிக் கதையெழுதுவது எவ்வளவு பெரிய அபத்தம். இதன் மூலம் இந்த சமூகத்திற்கு தம்பி முஸ்டீன் என்ன சொல்ல வருகிறார்? அவர் இந்த ஆண்டில் வெளிக்கொண்டு வர இருக்கும் 12 புத்தகங்களும் இப்படித்தான் இருக்குமா? அவர் முகத்தைப் பார்த்தால் பால் வடியும். ஆனாலும் அவரின் உள்ளம் இருண்ட சாக்கடையில் கிடக்கிறது என்பதற்கு இந்த நூலுக்காக அவர் வழங்கியுள்ள விளம்பர வார்த்தைகளே சாட்சியம் பகர்கிறது. அவர் நல்லதொரு மனநல வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டும். அவருக்கு அது மிகவும் நல்லது. இதில் எந்த பொறாமையும் எரிச்சலும் கிடையாது. அவருக்கும் நமக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.