Header Ads



நாங்கள் குற்றமற்றவர்கள் - இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய


இலங்கைக்கு அபகீர்த்தி எற்படுத்தவும், ஓர் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்காகவே ஜெனீவாவில் மனித உரிமைகளை நாங்கள் மீறியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள். எமது இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்று இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார்.

வரவிருக்கின்ற சித்திரை மாதத்து தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டி, இராணுவத் தளபதி படையினரைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் இலங்கை மரபுக்கமைய இன்று அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து அங்குள்ள படையினர் மத்தியில் உரையாற்றினார்.

முன்னதாக கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் அந்த மாவட்டத்தின் கட்டளைத் தளபதி உள்ளிட்ட உயரதிகாரிகள் அவரை வரவேற்றளர். படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இரணைமடுவில் ஏ9 வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான நலன்புரி கடைத்தொகுதியை அவர் வைபரீதியாகத் திறந்து வைத்ததன் பின்னர், இரணைமடு படைத் தலைமையகத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றினார். 

நல்லிணக்க ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய இராணுவ விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்த விசாரணைகளில் இராணுவத்தினர் குற்றமற்றவர்கள் என்பது வெளிப்பட்டிருக்கின்றது. இது தொடர்பிலான அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கின்றது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார். 

No comments

Powered by Blogger.