Header Ads



காத்தான்குடியில் பூரண ஹர்த்தால் (பிரத்தியேக படங்கள் இணைப்பு)



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அண்மைகாலமாக இலங்கை முஸ்லிம்களை குறிவைத்து இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ் நிலையை கண்டிக்கும் வண்ணமும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டுக்கு ஏதிர்ப்புத் தெரிவித்தும் நாடு தழுவிய ரீதியிலும் ,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமை கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹார்த்தாலும் அனுஸ்டிக்கப்ட்டுவருவதோடு இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் தவனைப் பரீட்சை இடம்பெறுவதால் வழமை போன்று  மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி பாடசாலை செல்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் அமைதியான முறையில் ஹரத்தால் அனுஸ்டிப்பட்டுவருவதோடு வர்த்தக நிலையங்கள்,சந்தைகள், மூடப்பட்டு காணப்படுவதுடன் பிரதேச செயலகம்,அரச அலுவலங்கள்,வங்கிகள் திறக்கப்பட்டு சேவைகள் இடம்பெற்று வருவதோடு இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டடுள்ளனர்.

தற்போது இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும்.பொதுபல சேனா என்ற இனவாத அமைப்பின் மத அடக்கு முறைக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இன்று நாடு தழுவிய ரீதியில் இந்த அமைதியான கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நிந்தவூர் ,சம்மாந்துறை,சாய்தமருது,மருதமுனை அட்டாளைச்சேனை பொத்துவில் அக்கரைப்பற்று ஒலுவில் பாலமுனை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது.

இந்த கடையடைப்பு ஹர்த்தாலுக்கு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு(ஆசுழு)அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments

Powered by Blogger.