Header Ads



மன்னார் மாவட்டத்தில் ஆடை தொழில்துறையில் வேலைவாய்பு பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான கலந்துறையாடல்


(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் மாவட்டத்தில் ஆடை தொழில்துறையில் வேலைவாய்பு பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான கலந்துறையாடல் இடம்பெற்றது.நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சர் றிஸாட் பதீயுதீன் பணிப்புறைக்கு அமைவாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் சரீப் கலந்து கொண்டார்.

மன்னார் மாவட்டத்தில் அமைக்க உள்ள இந்த ஆடைதொழிற்சாலைக்கு 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து மொத்தமாக 1000 போர் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர்.இத் தொழிற்சாலையினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள படித்து விட்டு விட்டில் இருக்கும் யுவதிகள் அதிகமான நன்மை அடைவார்கள். இக் கலந்துறையாடலுக்கு நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் சகாப்தீன் மற்றும் பிரதேச சபை செயலாளர் இன்னும் நானாட்டன் அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.மேலும் பிரதேசத்தில் இருந்து சுமார் 480 அதிகமான படித்த தமிழ் யுவதிகள் வருகைதந்திருந்தனர்.


No comments

Powered by Blogger.