முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்தவேண்டும் - ரணில்
(அனா)
பௌத்த மதத்திலுள்ள சில கிளர்ச்சி குழுக்களைக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டங்களை நடத்த முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறினார்.
இன்று (30.03.2013) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க ஏறாவூரில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ஏ.சி.ஹியாஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் வாழுகின்ற தமிழர்களை நசுக்கிய இந்த அரசாங்கம் இப்போது பௌத்த மதத்திலுள்ள சில கிளர்ச்சிக் குழுக்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தை நசுக்கத் தொடங்கியுள்ளது.
தம்புள்ள, அனுராதபுரம், குருநாகல் போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு என்ன துன்பங்கள் நடந்தது என்று உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்.
ஆனால் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எத்தனை அநியாயங்களை செய்து வருகின்ற போதிலும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு திரியும் அரசியல்வாதிகள் இது வரை வாய் திறக்க வில்லை.
இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில்தான் இருக்கின்றது. ஏன் இவர்களால் வாய் திறந்து பேச முடியாமல் உள்ளனர்.
ஆனால் பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்களை முன்வைத்த வேளையில் எமது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையும், இக் கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களிடம் சென்று பேசினார்கள்.
இன்று பாருங்கள் பெப்பிலியானவில் நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த வித அறிக்கையும் விடவில்லை. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இவ்வாறான இனரீதியான செயற்பாடுகளைக் கண்டிக்கவுள்ள அதேவேளை செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் எனவும் கேட்கவுள்ளது.
இங்குள்ள முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்துள்ள போதிலும் அரசாங்க கட்சியில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அனைவரும் மௌனியாக காணப்படுவதை என்னி இன்று ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிடுகின்றது.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 2009 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லினக்க ஆணைக்குழு மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த விடயங்கள் எதனையும் அரசு அமுல் படுத்தவில்லை. ஆனால் இப்போது முஸ்லிம்களைக் குறிவைத்து அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கும் அதேவேளை சீரான சுகாதார வசதி இன்மை, இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பின்மை இதனால் கஷ்டப்படும் மக்கள் வெளிநாடு சென்று கஷ்டப்படுகின்றனர்.
எனவே 2014 ஆம் ஆண்டில் ஒரு தேர்தல் வருகின்ற போது அரசை மாற்றுகின்ற பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். அதற்காக நாம் இந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வேளையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களை ஒன்றினைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 02 பாராளுமன்ற உறப்பினர்களை நியமிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதன் நிமிர்த்தம் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.தே.கட்சியின் பக்கம் தலை சாய்க்க வேண்டிய தேவையிருக்கின்றது.
தேர்தல் வந்த பின்னர் அரசாங்கத்திற்கு வாக்களித்து விட்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நீங்கள் ஐ.தே.கட்சியிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளை ஐ.தே.கட்சி கண்டிக்கும் அதேவேளை முஸ்லிம்கள் நாங்கள் இலங்கையர்கள் எனும் கோஷத்தினை முன்வைத்து அரசிக்கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும்.
அதற்காக ஐ.தே.கட்சி மே மாதம் 01ஆம் திகதி 03; கட்டங்களாக இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது. அதற்கேற்ற வகையில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றினைந்து குழு ஒன்றினை உருவாக்கி அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க ஆயத்தமாகுங்கள். ஐ.தே.கட்சி முழு ஆதரவுகளையும் வழங்க தயாராகவுள்ளது.
இவ்வாறு அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து நாட்டில் ராஜபக்ஷ ஆட்சியை மாற்ற வேண்டும் என்றார்.
we know when how to do thanks for your concern
ReplyDeleteranil should call all the peace loving people of srilanka against the government & bbs NOT only MUSLIM.If he won't do this certainly again he shows he isn't fit for the job as an opposition leader.
ReplyDeletecannot believe ranil
ReplyDeleteஎதிர் கட்சி ரணில் Sir போராட்டம் உங்களிபோல் நல்ல கௌரவமான சிங்களவர்கள் மூலம்தான் ஆரம்பிக்க வேண்டும் முஸ்லிம்கள் ஆரம்பித்தால் அது இனவாதமாகி முஸ்லிம்களை பயகராவாதியாக்கி உலகையே நம்ப வைத்துவிடுவீர்கள் நீங்கள் உண்மையான அக்கரயி உள்ள தலய்வராஇருந்தா ஆரம்பியுங்கள் அடுத்த முறை election இல் 95%முஸ்லிம்கள் உங்கள் பக்கம் 5%முனாபிகுகள் மாறமாட்டார்கள்
ReplyDeleteobathuma bora diye maalu baanna yanawa,kata wahagena oya pakse inna ithuru pakshikayowa bera gena inna wanam hondai thopi
ReplyDeleteRanil kanda Api renda
ReplyDelete