ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீது ரொக்கேட் தாக்குதல்
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க அதிபர் ஒபாமா, மூன்று நாள் பயணமாக, இஸ்ரேல் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும், அதிபர் ஷிமோன் பெரசையும்,ஒபாமா, சந்தித்து பேசினார். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசையும் அவர் சந்தித்தார்.
ஒபாமாவின் வருகைக்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனம் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையை எதிர்த்து வரும் அவர்கள், ஒபாமா உருவம் அச்சிடப்பட்ட போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதற்கிடையில், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள ஸ்டிரோட் நகரில், காசா பகுதியில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ராக்கெட்டுகள் விழுந்தன.
இதில் ஒரு ராக்கெட், வீட்டின் மீது விழுந்து வெடித்ததாகவும், மற்றொன்று ஆட்கள் இல்லாத, திறந்த வெளி நிலத்தில் விழுந்ததாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இத்தாக்குதலுக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் அடிக்கடி நடக்கும் தாக்குதல்களால், அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment