Header Ads



முஸ்லிம் அரசியல் வாதிகள் குருடர்களாக இருப்பது ஏன்..?


வரலாற்று தவறுகளால் இலங்கையில் முதன் முதலாக இடம்பெற்ற கரை படிந்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்திற்கு 100 ஆண்டுகள் பூர்த்தியாக இன்னும் சிலகாலம் இருப்பதாக சரித்திர சான்றிதழ்கள் செய்தி வெளிவரும் இக்காலகட்டத்தில் மீண்டும் கரைபடிந்த அந்த கரியுகத்தை நினைவு கூறும் வகையில் இந்தநாட்டில் அந்நிய ஆதிக்கத்தின் உதவியுடன் எமது மக்கள் மீதும் மதத்தின் கொள்கை மீதும் அவதுர்றுகளும் அடாவடித்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது இவ்வாறான ஏனைய மதத்தின் மக்களின் மத சுதந்திரத்தையும். வுhழ்வியல் உரிமைகளையும் எவரும் தடுத்து நிறுத்த இடமளிக்க முடியாது இவ்வாறு முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொஹமட் பைசால் கருத்து தெரிவித்தள்ளார். 

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முதல் அன்மையில்  ஆரம்பித்த ஹலால் பிரச்சனை மற்றும் புதிதாக மீண்டும் முளைத்துள்ள முஸ்லிம் பெண்கள் அணியும் கலாசார உடை பர்தா வரை இன்று பேரினவாத பௌத்த மக்களுக்கு கசப்பான விடயமாக போதிக்கபடுகிறது. இதன் காரணமாக இன்று நாம் வாழ்வதற்கு இந்த நாடு பாதுகாப்பானதா? என்ற கேள்விக்குறியுடன் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். 

அன்று தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆவேசத்துடன் அங்கு சென்று தங்களது பதவிகளை தூக்கியெறிவோம். எமது மக்களும் மதமுமே எமக்கு தேவை அவற்றை பாதுகாப்பதற்காக  எமது உயிரையும் பணயம் வைப்போம் என்றால் உறுதியுரை வழங்கி விட்டு இன்று நடக்கும் அதைவிட மோசமான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவளிப்பவர்கள் போல மௌனமாகவும், குருடர்கள் போலவும் கண்டுகொள்ளாமல் இருப்தன் காரணம் என்ன? தங்களது பதவி, பவுசு. சொகுசான வாழ்வு பறிபோய்விடும் என்ற அச்சமா?  அவர்களுடைய அல்லது அவர்களின் குடும்ப உறவினர்களின்  ஊழல் பட்டியல் அரசாங்கத்தின் கைகளில் சிக்கியுள்ளது என்ற பயமா? 

இன்று முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கத்திற்கு முட்டுகொடுத்து கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் மக்களும் இஸ்லாம் மதமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உண்மையான உணர்வு இருந்தால் உடனடியாக  தங்களது பதவிகளை தூக்கி எறிந்த விட்டு மத விசுவாசிகளாவும், மக்கள் விசுவாசிகளாவும் இருக்க வேண்டும் அதன் மூலம் இந்த ஆட்சியாளர்களுக்கும், தகுந்த படிப்பினையை வழங்கவேண்டும். 

தமது மதத்தையும், தங்களது கலாசாரத்தைம் பாதுகாத்துக்கொள்ள பல வழிகளை நடைமுறைபடுத்துவது கட்டாயக் கடமையமகும், அவற்றை தடுத்து நிறுத்துவதற்கோ, திருத்தியமைப்பதற்கோ எவருக்கும் இடமளிக்க கூடாது. 

மொஹமட் பைசால் 
பொதுச்செயலாளர் 
முஸ்லிம் இடதுசாரி முன்னணி.

2 comments:

  1. ஹகீம் எங்கள் ஊருகு இனி வந்தால் செருப்படி வாங்குவார் அவர் இலக்சனில் கதைத்த கதைக்கு கெட்ட சுயநல காரன் இவன் முஸ்லிம்களின் தளைவரா

    ReplyDelete
  2. நல்ல பேச்சு நல்ல கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.