எமது பாதுகாப்பை உறுதி செய்யாத எந்தவிடயத்திலும் ஈடுபட வேண்டாம்..!
அஷ்ரப்
எம்மை நோக்கி எமது எதிரிகள் எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். எந்த விடயத்தில் நாம் தவறு விடுவோம் என சந்தர்ப்பம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்னும் நிலைக்கு எம்மை சாடுகிறார்கள். நாம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறிய சர்ந்தர்ப்பங்களைக் கூட நமக்கெதிராக திருப்பிவிட துடித்துக் கொண்டிருக்கிறார்கள்...
இலங்கை முஸ்லிம்கள் நடந்தாலும் குற்றம், இருந்தாலும் குற்றம், படுத்தாலும் குற்றம் என்னும் நிலைக்கு எம்மை தள்ளிவிட எத்தனிக்கிறார்கள். எம்மவர்களின் இருப்பைக் காக்கவும், நாட்டில் முஸ்லிம்களின் நீண்டகால நன்மையை கருத்தில் கொண்டும் ஹலாலில் விட்டுக்கொடுத்தோம், பின்னர் எம் பெண்களின் ஆடை விடயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள். அதிலும் அமைதி காத்துக் கொண்டு வருகிறோம். இருந்த போதிலும் அவர்களுக்கு திருப்தி இல்லை.
என்ன செய்தால் இவர்களுக்கு கோபம் வரும், எப்படி இவர்களை சந்திக்கு இழுக்கலாம், எப்போது இவர்கள் சண்டைக்கும், தகராறுகளுக்கும் தயாராவார்கள் என்பதுதான் இன்று பொது பல சேனாவின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியில் பல்வேறு சதிகாரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் அமையும் வேளை சரமாரியாக முஸ்லிம்களைத் தாக்கவும் தயாராக இருக்கலாம். தட்டிக் கேட்க யாருமே வரமாட்டார்கள் என்பதும் நிச்சயம். தகுந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க கனவும் காண முடியாது.
எனவேதான் நமது முஸ்லிம்கள் முக்கியமாக நம் இளைஞர்கள் பொறுமை காக்க வேண்டியது கட்டாயமானது. இந்த சந்தர்பத்தில் நமது பொறுமையையும், அல்லாஹ்வின் உதவியையும் கொண்டுதான் நாம் நம்மைப் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். அமைப்புக்களும், அரசியல் வாதிகளும் நம்மையும், நம் வாலிபர்களையும் தூண்டி விட்டு வீதிக்கு இழுத்து காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். நம் வாலிபர்களை கடந்த காலங்களைப் போல இன்னும் நாம் இழக்கத் தயார் இல்லை. அறிவு பூர்வமான, இஸ்லாம் காட்டித் தந்த வழிமுறையில் எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.
எமக்கும் எமது சமூகத்துக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளால் எந்த பாதுகாப்பும், உத்தரவாதமும் கிடைக்கப் போவதில்லை என்பது திண்ணம்.
பகிரங்கமாக எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்ப்போம். பகிரங்கமான செயற்பாடுகளில் இருந்து எம் வாலிபர்களை தூரமாக்குவோம். கடையடைப்பு, ஹர்த்தால் விடயங்களில் நாம் எதிர்ப்பை காட்டினாலும் அது நம் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது. முஸ்லிகளுக்கு எதிராக இலங்கையில் எத்தனை சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டன, விநியோகிக்கப் பட்டன, ஆனால் பாதுகாப்புப் படையினரோ, காவல் துறையினரோ இதனை அணுவளவும் கருத்தில் எடுக்கவில்லை.
ஆனால் நேற்று அக்கரைப்பற்றில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அறிவித்தல் வழங்கும் சுவரொட்டிகளை ஒட்டிய நம் இரண்டு முஸ்லிம் வாலிபர்களை உடனடியாக கைது செய்துள்ளனர் இந்த காவல் படையினர். இப்படி வெளியாகும் இளைஞர்கள்தான் இனவெறியர்களின் முதலாவது எதிர்பார்ப்பு. இன்று இரண்டு இளைஞர்கள், நாளை நான்கு, நாளை மறுநாள் எட்டு.... இதுதான் இனவாதிகளின் எதிர்பார்ப்பு. இப்படி நம்மை என்னவாவது செய்து அவர்களோடு சண்டைக்கு அழைக்க வேண்டும். நம் இளைஞர்களை நடு வீதிகளில் குவிக்க வேண்டும், இளைஞர்கள்தான் அவர்களது முதலாவது எதிர்பார்ப்பு.
எனவேதான் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிமான அனைவருக்கும் ஆத்திரமும், ஆவேசமும், எதிர்ப்பும் வெளிப்படும் அளவுக்கு அந்நிய மதத்தவரின் செயல்பாடுகள் அமைந்திருந்தாலும், நாம் அதற்கெதிராக நம்மவர்களை தூண்டி விட்டு நாளை நமக்கே அது பெரிய இழப்பாக மாறும் வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டாம்.
அவசராமான முடிவுகள் சைத்தானின் பக்கமிருந்து கிடைக்கின்றன. அவசரத்தில் நாம் விடும் அறிக்கைகள், நாம் மேற்கொள்ளும் முடிவுகள் நமக்கு பாதகத்தையே ஏற்படுத்த தக்கவை. பொறுமையாளர்களாக எமது முடிவுகளில் சிறப்பான சிந்தனையோடு, எதிர்கால நன்மைகளையும், விளைவுகளையும் கருத்தில் கொண்டு செயற்படுவோம். நமக்கான பாதுகாப்பு நமது இறைவனிடமே தவிர வேறு யாரிடமும் இல்லை.
எமக்கான தலைமைத்துவமான ACJU இன் கருத்தினை மட்டும் கேட்டு, அவர்களின் வழிகாட்டுதழில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வோம். தனியான அமைப்புக்களின் எந்தவிதமான செயற்பாடுகளிலும் எமது வாலிபர்களைப் பங்குபற்றுவதில் இருந்து தவிர்த்துக் கொள்வோம். அல்லாஹ்விடத்தில் இருந்து நமக்கான பாதுகாப்பும், அவனுடைய இந்தப் புனித இஸ்லாத்திற்கான பாதுகாப்பும் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.
But ACJU is newer ask to others. Himself taken decision. We young's "insha allah" we have idea better then ACJU OLDER. If u cannot do give to others.
ReplyDeleteACJU.... Don't brush butter to government and muslim politicians. Last 3days SLBC Muslim services and ACJU doing this job's. And disturbing BBC Tamil service.
What is the limits of the patients......?