அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் நாடு திரும்பினார்
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) தாய் நாடு திரும்பினார் . நீதிபதிகளை கூண்டோடு நீக்கியது, முக்கிய பிரமுகர்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி லண்டன் மற்றும் சவுதியில் தங்கி இருந்து வந்தார். அவர், 4 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாகிஸ்தான் திரும்பினார். இவரை நரகத்திற்கு அனுப்புவோம் என தலிபான்கள் மிரட்டல் விடுத்திருந்ந போதிலும் தமது நாட்டு மக்களுக்காக நாடு திரும்புவதாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார். பாக்., அரசும் இவரை கைது செய்வோம் என எச்சரித்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று பாகிஸ்தான் வந்த இவருக்கு விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் கரகோஷத்துடன், வாழ்த்து கோஷம் எழுப்பி சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த மிரட்டலுக்கு பின்னர் நேற்று அவர் அளித்த பேட்டியில் ; நான் சாவுக்கு அஞ்ச மாட்டேன். பாகிஸ்தான் மக்களின் நன்மைக்காகவே நான் எனது நாட்டிற்கு செல்கிறேன் என்றார். அங்கு நான் கைது செய்யப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை. பலுசிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா உதவி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment