Header Ads



அடிப்படைவாதமும்..! அடிப்படைவாதிகளும்...!!



(எம். எச். முஹம்மத்)

அடிப்படைவாதத்திற்க்கும்,அடிப்படை உரிமைகளுக்குமான வாதற்க்கும் இடையிலான வேறுபாடு துள்ளியமாக வரையரை செய்யபடக்கூடியது. இந்த நாடடில் முஸ்லிம்கள் மீது தொடுக்கபட்டுள்ள மானசீகமான ஒடுக்குமுறையின் பின்னனியே அடிப்படைவாதத்திற்க்கு நடைமுறையில் கொடுக்கபடக்கூடிய உதாரணமாக இருக்கிறது. காத்தான்குடி பள்ளிவாயலில் அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாக கொன்றுக்குவிக்கபட்ட போதும், வடக்கு வாழ் பூர்விக முஸ்லிம் சமூகம் அகதியாக நிர்கதியாக்கபட்ட போதும் இலங்கையில் தலையுதத்தாத 'ஜிஹாதிஸம்' இன்று உலாமா சபையுடாகவும், ஹாலாலின் மூலமும் தலைதுக்கியதாக வார்த்தைகளிள் நிர்ணயிக்கபடுவதே அடிப்டைவாதமாகும்.

 விடுதலைப்புலிகள் தனிஇராஜங்கம் நிறுவிய காலப்பகுதியில்  தெற்கின் மூலைமுடுக்குகளிள் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியிருந்த அடிப்டைவாதிகளின் அடிப்படைவாத சிந்தனைகள் இன்று அணிசேர்க்கபட்டு செவ்வனே செயல் வடிவம் கொடுக்கபட்டு அரங்கேற்றப்படுகிறது. அடிப்படைவாதத்தினை கக்கும் இந்த சூத்தப்பாம்புகளும் தங்களை நாகப்பம்புகளாக நினைத்து நாட்டில்  களமிறங்கிவிட்டனர. உண்மையாகவே அதற்க்கான மகுடி இசை சர்வதேச புலானாய்வுப்பிரிவுகளே இசைக்கின்றன என்பது நாடறிந்த ஒன்று. அடிப்படை வாதிகளை உசுப்பேற்றி சர்வதேச மாபியாக்கள் விளையாட நினைக்கும் இந்த இராஜதந்திர காவாலித்தனத்தின் அல்லது காடைத்தனத்தின் பின்னனியில் இரண்டு வெளிப்படையான உண்மைகள் இருப்பது இந்த நாட்டிட்க்கு தெளிவுப்படுத்தபடல் வேண்டும்.

 1-    விடுதலைப்புலிகள் விழ்ச்சியினால் எதிர்பாரதாவிதமாக சர்வதேச மாபியாக்களுக்கு ஏற்பட்ட ஆயுத வியாபாரத்தின் வீழ்ச்சி.

2-    ஸ்ரீ லங்காவில் பிரிவினை வாதத்திற்க்கு தீணியிட்டு வளர்பதன் ஊடாக இறைமை பொருந்திய ஒரே தேசம் என்பதை இரண்டாக்கி இலாபம் காண துடியாய் துடித்த அமெரிக்காவுக்கும் நோர்வேவுக்கும் தமது இலக்குகளை இறுதி வரை சாதிக்கமுடியாமல் போனமை.

இவ் இரண்டின் பின்னனியை வைத்தே இன்றைய சூழ்நிலையில் பல்வேறுவடிவில் முஸ்லிம்களுக்கு எதிராக சவால்கள் தோற்றம் பெற்றுள்ளது.

அடிப்படைவாதத்தின் தோற்றுவாயும்,இன முறுகலின் பின்னனியும் 1956 ம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டத்தில்  இருந்தே உருவாகிய அம்சமாக நோக்கபட்டாலும், அடிப்டைவாதத்தின் இயல்பான வரலாறு நமது நாட்டின் தேசிய கொடி உருவாக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட்ட அம்சமாக நோக்கபட வேண்டும்.இலங்கையின் கொடியுருவாக்கத்தின் போது வெறுமனே பௌத்த சிங்களவர்களை மாத்திரம் பிரதிபலிப்பதாக கூறி செனடர் நடேசேன் என்பவர் முரண்பட்டதாக வரலாற்று தரவுகள் எமக்கு சுட்டிக்காட்டுகிறது.அவரின் முரண்பாடடின் விளைவே இன்றைய தேசிய கொடியில் முஸ்லிம்களையும், இந்துக்களையும் பிரதிபலிக்கும் சிவப்பும் பச்சையும் ஒட்டிக் கொண்டு இருப்பதன் பின்னனியாக இருக்கிறது.

ஆரம்பகால அடிப்படைவாதத்தின் பின்னனியும,; எழுச்சியும் எது எப்படியிருந்தபோதிலும் சுயாதினமாக தோற்றம் பெற்ற அம்சமாகவே கருதமுடியும்.ஆனால் அதற்க்கு பிற்பட்ட காலப்பகுதி தொடக்கம் இன்றைய பொதுபல சேனா வரை ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேச மாபியாக்களின் பின்னனியிடன் பிரித்தெடுக்க முடியாத அளவு அடிப்படைவாதமும்,    இனவாதமும் தொடர்புபட்டதாகும்.

இன்றைய முஸ்லிம் சமூகம் தனது சிந்தனையுடாக உணர்ந்துள்ள அம்சங்களிள் பொதுபல சேனா,ராவய ஹேல உறுமய போன்றவை வெறுமனே நம் சமூகத்தில் காணப்படும் அரசியல ரீதியான பிரிவு,வாஹாபி ஸலபி போன்ற காட்டிக்கொடுப்புகளை மையபடுத்தி சுயசிந்தனை அடிப்டை வாதிகளாள் உருவாக்கபட்டவையல்ல, மாற்றமாக சர்வதேச புலானய்வு மாபியாக்களின் சிருஸ்டிப்புக்கள் ஆகும். ஆனால் மேற்குறித்த எமது பலவினங்கள் இந்த பயங்கரவாத முகவர்களுக்கு வினைத்திறனான செயலாக்கத்திறக்கு ஏதுவானதாக அமைந்திருக்கும் சில காரணிகள் மாத்திரம் என்பதுவே நிஜமாகும்.

 மேலும் உலாமா சபைக்கும் அல்-கொய்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக பரப்புரை நிகழ்த்தி திரியும் பொதுபல சேனா நாட்டின் தேசிய புலனாய்வு முகவர் (NIB)அமைப்பாக மாற்றம் கண்டுள்ளதா?? என்பதை அரசே தெளிவுபடுத்த வேண்டும்.நீண்ட கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்த  அரசாங்கத்திற்க்கு மீண்டும் பயங்கரவாதத்தினை வளர்க்க எத்தனிக்கும் பொது பல சேனாவையும் அதன் பிரதிநிதிகளையும் கையாள முடியாத  பொம்மை நிலைக்கு தள்ளபட்டுள்ளமை பொதுபல சேனாவின் அழுத்தத்தில் அரசு தலைவணங்கிச் செல்லும் நிலையை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

நாட்டில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுகின்றமை, சட்டத்தை கையில் எடுத்தல் போன்ற பல விடயங்களோடு தொடர்புபடுத்தி தடைசெய்யபட வேண்டிய இந்த சர்வதேச மாபியாக்களின் சதுரங்க காய்கள,;வெறுமனே ஹெல உறுமயவின் நெருங்கிய சாகாக்களாக இருப்பதை மாத்திரம் கருத்திற்கொண்டு இவ் அரசாங்கம் தயக்கம் காட்டவில்லை இதர பல விடயங்களுக்காவே பொறுமை காக்கின்றமையே ஒளிந்திருக்கும் யாதார்தம் எனலாம்.

ஸ்ரீ லங்காவின் சரித்திரத்தில் விடுதலைப்புலிகளைப் போன்று பொதுபல சேனாவும் மிகப்பெரிய துக்கரமான பல அசம்பாவிதங்களுக்கு பங்களிப்பு செய்த இயக்கமாக பேசப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்த நாட்டில் பௌத்தத்தின் பெயரால் யாரேல்லாம் அடிப்படைவாதிகளாக ஆனார்களோ அவர்கள் எல்லோருமே புத்தர் சொன்ன கொள்கையின் அடிப்படையில் சிறிதும் அன்றி வெளியேறிப்போனதே வெட்கித்தலைகுனிய வேண்டிய விடயமாகும்.

No comments

Powered by Blogger.