Header Ads



ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


(Nf) ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை இம்மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இன்று 04-03-2013 அழைப்பாணை விடுத்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஓய்வு பெற்ற கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள வழக்கிற்கு சாட்சி வழங்குமாறே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்றதன் பின்னர் தமது பாதுகாப்பிற்காக கடமையில் இல்லாத 10 படையினருக்கு புகலிடம் அளித்தமை உள்ளிட்ட 45 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முதலாவது பிரதிவாதியான முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா சுகவீனம் காரணமாக இன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க முடியாது போனதாக தெரிவித்து அவரது சட்டத்தரணி ருக்ஷான் நாணயக்கார வைத்திய அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு தாம் இணங்குவதாக அரச சட்டத்தரணி தமித் தொடவத்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதற்கு இணக்கம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை இம்மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.

No comments

Powered by Blogger.