முசலியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா..?
(எஸ்.எச்.எம்.வாஜித்)
முசலி பிரதேசத்தில் சுமாராக 3600 குடும்பங்கள் மிள்குடியேற்றப்பட்டுள்ளனர் இருந்தும் அப்பிரதேச இளைஞர் மற்றும் யுவதிகஞக்;கு விளையாடுவதற்கு பொது விளையாட்டு மைதானம் இன்மையினால் பல வருடகாலமாக பல்வேறுபட்ட அசெகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மன்னார்இசிலாவத்துறைஇமணற்குளத்தினை பிறப்பிடமாக கொண்ட அப்துல் நாசிர் இம்தாத் என்ற மாணவன் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முசலி பிரதேச மட்ட 5000 மற்றும் 10000 மீற்றர் மரதன் ஒட்டப்போட்டியில் முதலாம் இடத்தினையும் மன்னார் மாவட்ட மட்ட 5000மீற்றர் மரதன் போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.மாகண மட்டபோட்டியில் மாணவன் கலந்து கொள்ளவில்லை.மாணவனிடம் வினவிய போது பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எல்லா வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சியினை வழங்குவதற்கு யாரும் முன்வராமை என கவலையுடன் தெரிவித்தார்.
இவ்வாறன குறைபாட்டினால் பல விளையாட்டு திறமைகளை கொண்ட முசலி மாணவர்களின் சாதனைகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இவ்வாறே மறைந்து போகின்றன.
முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கு வதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வருவதும் குறைவாகவே உள்ளன.
ஆகையால் இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்பதற்கினங்க அவர்களின் தேவைகளை இனங்கண்டு உரிய அதிகாரிகள் நிறைவேற்றி கொடுக்க முன்வர வேண்;டும் என முசலி இளைஞர்கள் வேண்டிகொள்கின்றனர்.
Post a Comment