Header Ads



திறமையானவர்கள் ஆண்களா..? பெண்களா..??


‘பெண் புத்தி பின் புத்தி’ என்று நம்மூரில் சொல்வார்கள்... அதற்கு அர்த்தம், பின்னாளில் வரக் கூடியதையும் சிறப்பாக கணிக்கக் கூடியவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். ஆம். ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர். ஆய்வு முடிவு விவரம்: ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.

தூண்டுதல் பகுத்தறிவு, எண் திறன், நிலைமையை வேகமாக மாற்றி விடக்கூடிய திறன் ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக விளங்கினர். சிக்கலான விஷயங்களிலும் பெண்களின் மூளை, மிக குறைந்த செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி தீர்வு காணும் திறன் படைத்துள்ளது. எனினும், புலம்சார்ந்த நுண்ணறிவில் ஆண்கள் சிறப்பாக விளங்கினர்.இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறிவியல் துறை பேராசிரியர் டிரிவோர் ராபின்ஸ் கூறுகையில், ‘‘மூளையின் அளவு என்பது ஒரு பிரச்னை இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ’’ என்றார்.

1 comment:

  1. பெண்களின் அய்க்கியூ அல்லது விவேகம் தொடர்பான எண்ணக்கரு,இன்று நேற்றல்ல பல நூறு வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்டு விட்டது.அதாவது மார்க்கத்திலே குறைவுடையவர்கள். அதாவது குறைவான அறிவுடைய வர்கள் என்பது நபி மொழியாகும்.ஏனெனில் அவர்கள் உடலியல் உளவியல் ரீதியாக பலவீனமாகவே படைக்கபட்டுள்ளார்கள்.இதனால்தான் சாட்சி கூறும் விடயத்தில், ஒரு ஆணின் இடத்திற்கு இரு பெண்களைக்கூறி குர் ஆன் சமப்படுத்தியுள்ளதோடு அவர்களின் பலயீனத்தையும் குறிப்பிடுகின்றது.அல்குர் ஆனில் கடன் சம்பந்தமாக அல்லாஹ் குறிப்பிடும்போது ,இரு ஆண்கள் சாட்சிகளாகக்கிடைக்கா விட்டால் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் சாட்சிகளாக.....(2.284)மேலும் சொத்துபங்கீட்டில் ஆணை விட பெண்ணுக்கு பங்குகள் குறைவாக வழ்ங்கப்பட்டுள்ளதானது,அவர்களின் உடல் உள குறை பாட்டையே குறித்து நிற்கின்றது.
    இவ்வறு நிரூபனமான விஅயம் இருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் புத்தி சுவாதீனமற்றவர்கள் செய்த ஆய்வொன்றை நிரூபிக்கப்பட்ட விடையம் போன்று முக்கியத்துவம் வழ்ங்குவது ஏற்றுக்கொள்ல முடியாத விடயமாகும்.சமூக ரீதியாக சிறந்த ஆக்கங்களை வழங்கும் இணையத்தளமான ஜஃப்ன முச்லிம் இவ்வாறான விஅயஙளுக்கு முக்கியத்துவம் வழங்குவது வருந்தத்தக்கதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.