'சொத்துப் பங்கீடு' இஸ்லாமிய மாநாடு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் சமூக சேவைப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் 'சொத்துப் பங்கீடு' இஸ்லாமிய மாநாடு நேற்று 8ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிக்கு முன்பாக நடைபெற்றது.
'சீதனத்தை நாம் எதிர்ப்பது ஏன்' 'சீதனக் கொடுமையும் சீரழியும் முஸ்லிம்களும்' சொத்துப் பங்கில் புறக்கணிக்கப்படும் ஆண்கள்'எனும் முக்கிய தலைப்புக்களில் அஷ்ஷெய்க் அன்சார் (தப்லீகி) அஷ்ஷெய்க் அப்துல் ஹமீட் ஷரயி அஷ்ஷெய்க் பீ.எம்.அஸ்பர் பலாஹி ஆகிய பிரபல்யமிக்க உலமாக்களினால் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
சமூகத்தில் சீதனக் கொடுமையால் அவதியுறும் பெண்களின் அவல நிலை, இஸ்லாத்தில் ஆண்கள்தான் வீடுகட்டி திருமணம் செய்ய வேண்டுமென்ற கட்டாய நிலையின் அவசியம், அது சமூகத்தில் நடைமுறையில் இல்லாததால் ஏற்படும் விபரீதம் என்பன தொடர்பில் விரிவாக சமுதாயத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
நம் சமூகத்தைப் பார்க்கும்பொழுது மிகவும் கவலையாகவும்,கேவலமாகவும் உள்ளது
ReplyDelete