மியன்மாரில் நேற்று வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்
உலகிலேயே புத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் குறிப்பிடத்தக்கது மியான்மர் ஆகும். ஆயினும், அந்நாட்டின் 60 மில்லியன் மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தினர் முஸ்லிம் மக்களாவர். முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே தவிர நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம் இன மக்கள் பெருவாரியான அளவில் வசித்து வருகின்றனர்.
969 இயக்கம் என்று புத்தரின் கோட்பாடுகளைக் குறிக்கும் எண்களைத் தங்கள் இயக்கத்திற்கு வைத்துக்கொண்ட புத்த மதத்தினர், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மேலும் , முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளிலோ, அல்லது அகதிகள் முகாம்களிலோ தஞ்சம் புகுந்துள்ளனர்.
நேற்று, வர்த்தகத் தலைநகரமான யான்கூனுக்கு மிக அருகில் இருக்கும் சிட் குவின் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடர்ந்தது. அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள், வெளியேறியுள்ளனர்.
Post a Comment