அளித்த உத்தரவாதத்தை மீறக்கூடாது - ஜம்மியத்துல் உலமாவுக்கு எச்சரிக்கை
(Gtn) இலங்கை ஓர் சிங்கள பௌத்த நாடு என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையை பல்லின அல்லது பல் மத மக்கள் வாழும் நாடாக கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பாணந்துறையில் இன்றைய தினம் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட மெதகொட அபயதிஸ்ஸ தேரோ இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஏனைய மதங்களும், ஏனைய இனங்களும் விஞ்சி விடாதிருக்க சிங்கள மக்கள் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்களப் குடும்பங்கள் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்மெனவும் இவ்வாறு குழந்தைகள் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பௌத்த மதத்தையும், சிங்கள இனத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படை வாதிகளக்கு எதிராக அணி திரள வேண்டும் - கலபட அத்தசாரே தேரர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபட அத்தசாரே தேரர் தெரிவித்துள்ளார்.
ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் நடைபெற்ற பொதுபலசேனா மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிற்கு அளித்த உத்தரவாதத்தை அகில இலங்கை ஜமயத்துல் உலமா மீறிச் செயற்பட்டால், மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் திரையிடப்பட்டுள்ள ஸ்ரீ சித்தார்த்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இந்தப் படத்தை சிங்கள பௌத்தர்கள் பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்தத் திரைப்படத்தை தயாரிப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment