இப்படித்தான் முடி வளர்க்க + வெட்ட வேண்டும் - வடகொரியாவில் சட்டம்
கம்யூனிச நாடான வடகொரியாவில் ஆண்களும், பெண்களும் முடி அலங்காரம் செய்து கொள்ள சில கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது 28 விதமான முடி அலங்காரம் செய்து கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஆண்கள் 10 விதமாகவும், பெண்கள் 18 விதமாகவும் முடி அலங்காரம் செய்து கொள்ளலாம்.
நீண்ட கூர்மையுடன் விரைப்பாக நிற்கும் ஸ்டைலில் முடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருமணமான பெண்கள் குறைந்த அளவிலும், திருமண மாகாத பெண்கள் நீண்ட, வளைவுடன் கூடிய கூந்தல் அலங்காரமும் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் 5 செ.மீட்டர் நீளத்துக்கு மேல் தலைமுடி வளர்க்க கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை முடிகளை வெட்டி திருத்தம் செய்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வயதானவர்கள் 7 செ.மீட்டர் நீளத்துக்கு முடி வளர்த்து கொள்ளலாம். முடி அலங்காரம் குறித்த போட்டோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Post a Comment