தெமட்டகொடயில் தற்போதைய நிலவரம்...!
(இப்னு நயீம்)
மஸ்ஜித் தௌஹீத் ஜும்மா பள்ளிவாயல் மற்றும் மினன் பள்ளிவாயல் (முஹிய்யத்தீன் ஜும்மா மஸ்ஜித்) முன்பாக தலா மூன்று போலீசார் குறுந்தாடியுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஏதும் வழங்கப்பட்டில்லை. கூட்டம் நடைபெறும் இடத்தில் இன்னும் மக்கள் சரியாக வந்த பாடில்லை. கூடாரத்துக்குள் சிலர் அமர்ந்துள்ளனர். கூட்டத்துக்கு பாதுகாப்பு நிமித்தம் பாதையோரம் பல போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தெமடகொட போலீஸ் OIC பள்ளிவாயல்களுக்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டுச் சென்றார்.
Please give us further updates. Any Muslim brothers from that area please inform the latest happening there. please. we cant wait dear brothers
ReplyDeleteNo issues very less crowed day by day they are loosing. A few incedent't happend and solved by police.
ReplyDelete3.00 மணிவரை வெறும் ஆசனங்களுடனே பேசிக்கொண்டிருந்தனர். "நாங்கள் இனங்களுக்கு இடையில் பிரச்சினை உண்டுபண்ண வரவில்லை. பௌத்த மதத்தை பலப்படுத்தவே வந்துள்ளோம். எனவே மக்களே நீங்கள் அனைவரும் கூட்டத்துக்கு திரண்டு வாருங்கள்." என்று 2:30 மணியளவில் ஒரு பௌத்த துறவி ஆசனங்களைப் பார்த்துக்கொண்டு மக்களை வேண்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது மேடையைத் தவிர வேறெங்கும், யாரும் இல்லை. பின்னர் கொஞ்சப் பேர் கூடாரத்தில் வந்தமர்ந்தனர். மீண்டும் கூட்டம் நடை பெற்ற இடத்தை நோக்கிச் செல்கையில் அனைத்து ஆசனங்களும் முற்றாக நிரம்பி இருந்தன. மீண்டும் சற்றுத் தூரம் மாளிகாகந்த பாதையால் செல்கையில் "கிளிப்டன் மகளிர் பாடசாலைக்கு" அருகில் 138 பாதை இலக்கம் கொண்ட கொழும்பு-ஹோமாகம செல்லும் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது புரிந்தது மக்கள் இறக்குமதி செய்யப்பட இடம் எதுவென்று. மல்லிகாராம பள்ளிவயலுக்கருகில் ஒரு சிங்கள ஆட்டோ சாரதி ஒருவர் கூறிய விடயம் ஞாபகம் வந்தது.
ReplyDelete"கொழும்பிலுள்ள சிங்கள மக்கள் எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். கிராமப் புறங்களில் இருந்து தான் அந்தக் கூட்டத்துக்கு மக்கள் வருவர். இவர்களுக்கு உக்கார்ந்து இருந்து கொண்டு சாப்பிட்டுச் சாப்பிட்டு உடம்பில் எண்ணெய் அதிகரித்துவிட்டது. அதனால்த் தான் இப்படிக் கத்துகிறார்கள்."
கூட்டத்தில் போகும் வரும்போது காதில் விழுந்தவற்றைப் பார்த்தால் புதிதாக இவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. முன்னுக்குப் பின் முரணாகவும், உலமா சபையை, குர் ஆணை சும்மா வம்புக்கு இழுத்தார்கள். வேலைப் பளு காரணமாக முற்றாக கேட்க முடியவில்லை.