இலங்கை கிரிக்கெட் விரர்களின் சம்பள விவகாரம் சூடுபிடிக்கிறது
(Sfm) கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கும், சிறிலங்கா கிரிக்கடுக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கட் வீரர்களுடனான சிறிலங்கா கிரிக்கட்டின் உடன்படிக்கை கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கிரிக்கட் வருமானத்தில் 78 சதவீத கொடுப்பனவை கோரியுள்ள சிரேஷ்ட்ட கிரிக்கட் வீரர்கள் 23 பேருடன், மேலும் சில வீரர்களும் சிறிலங்கா கிரிக்கட்டுடன் உடன்படிக்கையை ஏற்படுத்த மறுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் இன்றைய தினத்துக்குள் சிறிலங்கா கிரிக்கட்டின் உடன்படிக்கையில் சிரேஷ்ட வீரர்கள் கைச்சாத்திடவில்லை என்றால், எதிர்வரும் பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடருக்கு புதிய அணி ஒன்றை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்த அழுத்கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், சிறிலங்கா கிரிக்கட்டுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தப் போவதில்லை என்று கிரிக்கட்வீரர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் நாட்டுக்காக விளையாடாமல், வேதனம் தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்துவார்களாக இருந்தால், அவர்களை விலக்குவதில் தவறில்லை என்று முன்னாள் கிரிக்கட் அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தாம் தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது தமக்கு 250 ரூபாவே வேதனமாக வழங்கப்பட்டது.
தற்போது அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வழங்கப்படுகின்ற வேதன தொகை அதிகமாக இருந்தாலும், இலங்கை அணி வீரர்கள் நாட்டின் நிலவரங்களை அறிந்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு வேதன அதிகரிப்பை கோரிக போராடும் வீரர்களின் விபரங்களை சிறிலங்கா கிரிக்கட் வெளிப்படுத்த வேண்டும்என்றும் அவர் கோரியுள்ளார்.
நாட்டில் உள்ள நாட்டுக்காக விளையாடக்கூடிய ஏனைய இளம் வீரர்களை இணைத்துக் கொள்வதற்காக, இவ்வாறானவர்களை விலக்குவதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment