Header Ads



மாத்திரை இருக்கும்..! ஆனா இருக்காது...!



இங்கிலாந்தில் பிளேசிபோ சிகிச்சை சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வருகிறது. நோயாளிகளுக்கு எந்தவித ரசாயனமும் கலக்காத சர்க்கரை நிரப்பப்பட்ட மாத்திரை அளித்து குணப்படுத்துவதே பிளேசிபோ எனப்படும் சிகிச்சை முறை. இந்த முறையில் மாத்திரை எடுத்தால் நோய் குணமாகும் என்ற நினைப்பே எளிய விரைவான நிவாரணம் அளிக்கிறது. பக்கவிளைவுகள் கிடையாது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இந்த முறை எதிர்பார்த்த வெற்றி அளிக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்தின் சவுத்ஆம்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பிளேசிபோ சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுகுறித்த விவரம் வருமாறு: பிளேசிபோ எனப் படும் பக்க விளைவுகளற்ற சிகிச்சை முறை இங்கிலாந்தில் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. இந்த வகை மருத்துவ முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட ரசாயன கலப்பற்ற சர்க்கரை அடைக்கப்பட்ட கேப்சூல்கள் மட்டுமே நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. 

இதனால் மாத்திரை எடுத்துக் கொண்டால் நிவாரணம் நிச்சயம் என்று நம்புபவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். இதில் சோர்வு மற்றும் பல்வேறு வலிகள் குணமாவது உறுதியாகி உள்ளது. சர்க்கரை அடைக்கப்பட்ட இந்த மாத்திரைகளே பிளேசிபோ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை மருத்துவத்தில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட எந்தவித பரிசோதனைகளும் தேவையில்லை. இந்த முறையில் 97 சதவீத மருத்துவர்கள் கலப்பட பிளேசிபோக்களை பயன்படுத்துகின்றனர். இது எதிர்பார்த்த வெற்றி அளிக்கவில்லை. 12 சதவீத மருத்துவர்கள் கலப்படமற்ற பிளேசிபோ சிகிச்சை அளிப்பதால் வெற்றி கிட்டியுள்ளது. ஜிஎம்சி எனப்படும் ஜெனரல் மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மருத்துவர்கள் சுமார் 783 பேரிடம் ஆன்லைனில் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. நோயாளிகளின் ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே இவற்றை பார்த்து அதற்கேற்ப பிளேசிபோ சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று 84 சதவீதம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 66 சதவீத மருத்துவர்களோ மருந்து எடுத்துக்கொள்கிறோம் என்ற நினைப்பே நோய்களுக்கு தீர்வாகி விடும். அந்த வகையில் இந்தமுறை பலனளிக்கும் என்கின்றனர்.

No comments

Powered by Blogger.