தொப்பி அணிந்த பிக்குவை வரவேற்ற பொதுபல சேனா...!
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக ஏக்கூப் பைஸல்)
தேரர்கள் இந்தியாவில் தாக்கப்பட்டதை அடுத்து கருத்து தெரிவித்த பொது பல சேனா இந்திய முஸ்லிம்கள் தாக்கியது என கருத்து வெளியிட்டது. இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து இனமும் இந்தியன் என்ற மதத்தின் கீழ் வாழ்கின்றமையினை ஞாபகப்படுத்தி சேனாவின் கருத்தினை கண்டிப்பதோடு புத்தரின் தம்மபதத்தில் தண்டனை வர்க்கத்தில் இருந்து பொது பல சேனாவுக்கு ஒரு புத்தி !
'யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவார். சுடு சொற்கள் உண்மையாகவே, துன்பந்தருகின்றன. அடிக்கு அடி திருப்பி அடிக்கப்படும்' (தம்மபதம்)
Speak harshly to no one, or the words will be thrown right back at you. Contentious talk is painful, for you get struck by rods in return.
சென்னைக்கு யாத்திரைக்காக சென்றிருந்த ஹிக்தவுல உடுதவுல ரஜமகா விகாராதிபதி வதுபொல வங்கீச ஹிமியும் மற்றும் பிக்குகளும் சென்னையில் தாக்கப்பட்ட போது உயிரைக் காப்பாற்றுவதற்கு சாரம் ,சேட் ,தொப்பி அணிந்து மகாபோதி நிலையத்திற்கு வந்தடைந்தார்கள். தேரர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி, காவியுடைகளை கலைத்து மதச்சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய இந்தியர்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.
இறந்தகாலத்தில் யுத்தம் என்ற இனச்சுத்திகரிப்புக்குல் சிக்கிய இரண்டாவது சிறுபான்மையினர் நாட்டை விட்டு செல்வந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து இன்று இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தினை விட அனைத்து துறைகளிலும் உயர்ந்து உலகின் அனைத்து நாடுகளிலும் தழிழ் ஈழம் என்ற நாட்டினை அமைத்து வாழ்கின்றார்கள் . அன்றைய சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை அடக்கி விடலாம் என்று நினைத்தது. ஆனால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வழும் தழிர்களின் உரிமைக்காக போராடுகின்ற நிலை 30 வருட யுத்த முடிவுகளுக்குப் பின்னாலும் சர்வதேச சக்திகளின் உதவிகளோடு நடைபெறுகின்றது . இலங்கையை மனித உரிமை ஆணைக் குழுவரை கொண்டு சென்று அமெரிக்காவின் கைகளுக்குல் சிக்கவைத்து விட்டது. இதனால் எமது நாடு ஜெனிவாவில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கூறியதை கூறிக் கொண்டு இருக்கின்றது. எனினும் முஸ்லிம் நாடுகள் இலங்கையை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது.
அன்று தமிழ் மக்களின் மதச் சுதந்திரத்தினையும் , மொழிச் சுதந்திரத்தினையும் அடக்க கையாளப்பட்ட உத்திகளை இன்று முஸ்லிம்; மக்களுக்கும் அரசாங்கம் கையாளுகின்ற நிலை பொது பல சேனாவின் மூலம் நகரங்களில் கூட்டத்தோடு அரங்கேருகின்றது. இந்த நிலையினை மூளை இருக்கின்ற மூவின மக்களும் தடுப்போம். இல்ல விட்டால் எல்லா நாடுகளிலும் இலங்கையர்களை தாக்கும்; நிலமை தோன்றும்.
தமிழ் மக்கள் வாழுகின்ற நாடுகளுக்கும். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கும். பிக்குகள் காவியுடை கலைந்தும், சிங்கள அரசியல்வாதிகள் பயணிக்கும் போது , பெயர்களை மாற்றியும் அல்லது பாதுகாப்பு படையுடனும் பயணம் செய்வது இந்த நாட்களில் சிறந்தது என நாங்கள் கருதுகிறோம்.
முஸ்லிம் நாடுகளுக்கும், ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கும் செல்லும் போது எந்த பாதுகாப்பு படைகளும் தேவையில்லை மற்றும் தேரர்கள் காவியுடை கலைந்து சாரம், சேட், தொட்பி அணியவும் தேவையில்லை. மேலும் அரசியல் வாதிகளுக்கு எந்த கொடும்பாவிகளும் எரிக்கப்படமாட்டாது. மற்றும் தங்களது மத சுதந்திரத்திற்கு எந்த பாதிப்பும் வராது என நாங்கள் கருதுகின்றோம்.
அல்லாஹ்விற்கு மாத்திரம் அடிபணியும் இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் எந்த வெளிநாட்டு பிரஜைகளாலும் இலங்கையில் பிறந்த ஒருவன் தாக்கப்படுவதை தாங்கமாட்டோம். இதனால் தேரர்களை தக்கிய இந்தியர்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.
' நமக்கு உண்மையான ஜனநாயகம் கிடைத்துள்ளது. நமது ஜனநாயக அரசாங்கம் நம் உள்நாட்டுப் பிரச்சினைகளில்கூட தலையிடாமல் ஒதுங்கி நிற்கிறது. நேர்மையான பலரால், நேர்மையற்ற சிலரிடம் தேர்தலின் மூலம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பதைத்தான் நாம் ஜனநாகம் என்று கூறுகிறோம் '
idu ellam engaluku solli onnum aha poradu illa plz mudium inna idu ella warraum poi solluga shinhala tv,fm, ella watrukkum..naga mattum pesi onnum ah poradu illa..
ReplyDeleteI agree with this article. because, According to BBS who bias with racism and fundamentalism. So, BBS should understand about ISLAM. But, They are using Islam which their own needs. Therefore, Allah will convert them Ea-man very soon. Allah u Akbar.
ReplyDelete