முஹம்மதியா வித்தியாலயத்திற்கும், காலி றிச்மென்ட் கல்லூரிக்கும் நட்புறவு நிகழ்வு
(பஹ்மி யூஸூப்)
காலி றிச்மென்ட் கல்லூரியின் பழைய மாணவர்கள் அமைப்பின் வருடாந்த நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கல்லூரியின் அதிபர் கேணல் ஈ.எம்.எஸ். ஏக்கனாயக்க வழிகாட்டலின் கீழ் றிச்மென்ட் பழைய மாணவர்கள் அமைப்பினால் திருகோணமலை நிலாவெளி இக்பால் நகர் தி/முஹமதியா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நட்புறவு நிகழ்வு மற்றும் இலவச வைத்திய முகாம் பாடசாலை அதிபர் திரு.எம்.ஐ,சாஜிபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் குச்சவெளிக் கோட்டக் கல்வி அதிகாரி திரு.எம்.எம்.சம்சுதீன், திருகோணமலை பிரதான சிறைச்சாலை அதிகாரி, சீனக்குடா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் றிச்மென்ட் கல்லூரின் பழைய மாணவர்களான வைத்தியர்களின் இலவச வைத்திய முகாமும் இடம்பெற்றது.
இதில் பிரதேச மக்கள் அனேகர் பயன் பெற்றனர். றிச்மென்ட் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பினால் பாடசாலைக்கு போட்டேக் கொப்பி இயந்திரம், ஸ்கேனர் இயந்திரம், நீர் தாங்கிகள், அலுமாரி, காகிதாதிகள், வாசிகசாலைக்கான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கல்லூரி அதிபரினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. மற்றும் 01 தொடக்கம் 11 வரையான வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அன்பளிப்புகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் ஞாபகார்த்தமாக பாடசாலை வளாகத்தில் றிச்மென்ட் கல்லூரியின் அதிபரினால் மாமரக் கன்று ஒன்றும் நாட்டிவைக்கப்பட்டதுடன். இறுதியாக முஹமதியா பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் பாடசாலைக்கு விஜயம் செய்த அனைவருக்கும் மதியபோசன விருந்தளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment