Header Ads



மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு


மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைமைகள் அபாயகரமானவை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரச அமைப்புக்கள் மௌனம் காத்து வருவதாகவும், இந்த நிலைமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் பதற்ற நிலைமையானது இன சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகளின் மூலம் முரண்பாடுகளைக் களைய முடியும் என தெரிவித்துள்ளது.

இன மற்றும் மதப் பிரிவினைவாதங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் இது ஆபத்தானது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசியல் கட்சிகளோ ஏனைய அமைப்புக்களோ நாட்டின் தற்போதைய சூழ்நிலையை தங்களது சுயலாப நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

சமூகங்களை நல்வழிப்படுத்தவும், நல்லொழுக்கம் மிக்க மனிதர்களை உருவாக்குமே சமயங்கள் உருவானது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

1 comment:

  1. இதுதான் இன்றைய உண்மை நிலைமை தூண்டிவிட்டு முஸ்லிம் இன சுத்திகரிப்புக்கு அத்திவாரம் அமைத்துவிட்டு அமைதியாக பார்த்துகொண்டு இருக்கிறார்கள் நாடு பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது சிங்கள இளையவர்களை தூண்டிவிட்டு முஸ்லிம் விரோத தீயை வளர்த்து விட்டது Bbs அமைப்பு எது எப்படி இருப்பினும் முஸ்லிம்கள் பொறுமை காக்கும் வரை பிரச்சினை இல்லை முடியாத விடத்து முஸ்லிம் உடையில் வந்து இவர்களே வழிய வம்பிற்கு இழுப்பார்கள் கவனமாக காய் நகர்த்துவது நமது கடமை

    ReplyDelete

Powered by Blogger.