பொதுபல சேனா அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பு - தம்பர அமில தேரர்
பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலியின் ஏற்பாட்டில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வேற்றுமையில் ஒற்றுமை காணு வோம் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தம்பர அமில தேரர் இங்கு மேலும் கூறுகையில்,
நாம் அனைவரும் இலங்கையர் என்பதை முதலில் உணர வேண்டும். பள்ளிவாசல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அதனால் பெளத்தத்துக்கு ஆபத்து என்றும் சிங்கள பெளத்தர்களை ஏமாற்றி அச்சுறுத்தும் செயற்பாடுகளில் சிலர் இறங்கியுள்ளனர். உண்மையான பெளத்தர்களிடம் பிரிவினைவாதமோ, மதவாதமோ கிடையாது. நான் உண்மையான பெளத்தன் என்பதனை இங்கு கூறிக்கொள்கிறேன். அரைகுறை பெளத்தர்களாலேயே இந்த பிரிவினை வாதங்கள் தூண்டிவிடப்படுகின்றன.
சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான உறவு பேணப்பட்டு வருகின்றது. இந்த உறவினை சிதறடிப்பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. ஹலால் ஹராம் என்பவற்றை பிரித்துப்பார்க்கும் போது தமிழர்களையும் முஸ்லிம்களையும் தாக்குவதும் அரச காணிகள் வெளியாருக்கு விற்கப்படுவதும் ஜனநாயகம் மறுக்கப்படுவதுமே ஹராமாகவும் இவற்றுக்கு மாறானவை ஹலாலாகவும் பார்க்கப்பட வேண்டும்.
30 வருடகால யுத்தத்தினால் வலிமாத்திரமே எஞ்சியிருக்கின்றது. எனவே, அது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 2005ஆ ம் ஆண்டு காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஒரு பகுதியினர் கிளர்ந்தனர். அவர்கள் வேறுயாருமல்ல. ஜாதிக ஹெல உறுமய என்ற அமைப்பினரே அன்று இந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராகவும் செயற்பட்டு சிங்களவர்களின் வாக்குகளைப் பெற் றுக்கொண்டது.
அன்று நாம் அந்த செயற்பாட்டுக்கு எதிராக நின்றோம். அதே போன்றுதான் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்து நிற்கின்ற பொது பல சேனாவுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம். இன்னும் இரண்டு வாரம் அல்லது இரண்டு போயா தினங்களுக்குள் பொது பல சேனா என்ற அமைப்பு நிச்சயமாக அஸ்தமத்து மரணித்து விடத்தான் போகிறது. அதில் சந்தேகமே இல்லை.
இந்நாட்டில் பெளத்தத்துக்கு எதிராக பல்வேறு சக்திகள் முளைத்தன. ஆனால், எதுவும் செய்துவிடவில்லை. அதே போன்று தான் எதிர்காலத்திலும் பெளத்தத்தை எதுவும் செய்துவிட முடியாது. எனவே, பெளத்தத்துக்கு ஆபத்து என்ற மாயையான கருத்தியல்களில் இருந்து விடுபடுமாறும் சந்தேகங்களைக் கலையுமாறும் சிங்கள மக்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே , இந்நாட்டின் இன ஒற்றுமையை பேணுவதற்கும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கும் அனைத்து மதத் தலைமைகளும், சிவில் அமைப்புகளும், பேராசிரியர்களும், அரசியல் தலைமைகளும் ஓரணியில் திரளவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
அதேபோன்று இன, மத அடிப்படையில் இல்லாது தேசியத்தைக் கருத்திற்கொண்டே கட்சிகள் அமைக்கப்படுதல் மிகமிக அவசியமாகும். இது எதிர்கால இலங்கைக்கும் சிறப்பாக அமையும் அந்த வகையில் அசாத் சாலியின் இந்த முன்னணி அமைத்திருப்பதையிட்டு அவரது எதிர்காலப்பணிகளுக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
masah allah allah vin odaviyai parungal mailum allah vidam kelungal saththiyamaha allah eadahvadhu oru valeil tharuvan
ReplyDeleteUnmayana boththan ningal than
ReplyDeleteGreat wishes to Mr AsathSaali organizing the meeting
ReplyDeleteஉண்மையில் புத்த பிரானின் உண்மையான தத்துவத்தை சரியாக புரிந்து கொண்ட ஒரு சமயத் தலைவராக நாம் இவரை மதிக்கிறோம் காரணம் இவர் நன்கு படித்தவர் பல்கலைகழக விரிவுரையாளர்
ReplyDeleteஇது படிச்ச பிள்ள இல்ல பண்பா பேசுது. ஆனா அதுகள் எல்லைக் காவலில் கிடந்ததுகள் அப்படிதான் குரைக்கும்....
ReplyDeleteIts wonderful, Allah is great, we welcome this kind of people to develop our country and religious affairs.
ReplyDeleteகற்றாரைக் கற்றாரே காமுறுவர்.கல்விமான் ஒருவனால் மாத்திரமே கல்விமான்களை கௌரவிக்கமுடியும்.இந்த பிக்கு அவர்களின் பேச்சு இந்தக்கூற்றை உறுதிப்படுத்துகிறது.
ReplyDeleteஅப்புசாமி ஷாபா......ஷ்
ReplyDeleteகற்றாரைக் கற்றாரே காமுறுவர்.கல்விமான் ஒருவனால் மாத்திரமே கல்விமான்களை கௌரவிக்கமுடியும்.இந்த பிக்கு அவர்களின் பேச்சு இந்தக்கூற்றை உறுதிப்படுத்துகிறது.
ReplyDeleteஅடச் சீ... திருந்தாத சமூகமே!! அவர் பேசியுள்ள விதம் BBS ஐ மேலும் உத்வேகத்துடன் முன் செல்ல வைக்கும். அவர் (நல்லது நினைத்திருக்கலாம்) பேசியது தூர நோக்கில்லாத பேச்சு. உசிருக்குப் பயத்துல பிடிக்க ஒரு துரும்பு தேடும் சமூகமே உங்கள் அரசியல் வாதிகளை தட்டி எழுப்புங்கள். உங்கள் உலமாக்களைப் பலப் படுத்துங்கள். நீங்கள் கவனமாக காயை நகர்த்துங்கள். தெரியாது விட்டால் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருங்கள். "சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும் " கைங்கரியத்தைச் செய்யாதீர்கள். தெரியாத விடயத்தில் நீங்கள் சும்மா இருப்பது இந்த சமூகத்துக்கு செய்யும் பெரிய தொண்டு. நாளைய சமூகம் உங்களுக்கு பெரிய நன்றி செலுத்தும். அரசியல் நாடகத்தில் மீன் பிடிக்கும் கூட்டத்துக்கு விலை போகாதீர்கள்(நான் நம்மில் கரிசனையுடன் பேசிய அந்த பௌத்த பிக்குவை சொல்லவில்லை.) .
ReplyDelete