Header Ads



உலகில் முதன்முதலாக - பாகிஸ்தானுக்கு அவுட் கொடுத்த குமார் தர்மசேனா (வீடியோ)


கிரிக்கெட்டின் புதிய விதிமுறையால் வித்தியாசமான முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ஹபீஸ் ஆட்டமிழந்தார். 

தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் முகமது ஹபீஸ் ‘களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக’ புதிய விதிமுறையால் அவுட் கொடுக்கப்பட்டார்.

இதுகுறித்து கூறப் படுவதாவது:

சொட்சோபே வீசிய பந்தை ஃபர்ஹாத் ஸ்கொயர் லெக் திசையில் தட்டி விட்டு 2வது ரன்னிற்கு இருவரும் ஓடினர். அப்போது பந்து நேராக விக்கெட் கீப்பர் முனைக்கு வந்தது. விக்கெட் கீப்பர் டிவிலியர்ஸ் பந்தை எடுத்து ரன் அவுட் செய்வதற்காக ரன்னர் முனைக்க்கு அடித்தார். அப்போது ரன் எடுப்பதற்காக ஓடிக்கொண்டிருந்த ஹபீஸ்(0) தனது பாதையில் சிறு மாற்றத்தை செய்ததால் ஐசிசி அறிமுகம் செய்துள்ள புதிய விதியின்படி அவர் ‘களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக’ நடுவர் அவுட் கொடுத்தார். இந்த விதியின்கீழ் ஆட்டமிழக்கும் முதல் வீரர் ஹபீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் பாகிஸ்தான் போராடி வென்றது.


3 comments:

  1. புதிய விதிகளுக்கமைய Hafees க்கு ஆட்டமிழப்பு வழங்கப்படுவது முதல் தடவையாக இருந்தாலும் சர்வதேச ரீதியில் இது நாலாவது ஆட்டமிழப்பு ஆகும். obstructing the field என அழைக்கப்படும் இவ்வாட்டமிழப்பில் இதுவரை ஆட்டமிழந்தோர் விபரம் :
    1. Rameez Raja - 20 November 1987
    2. Mohinder Amarnath - October 1989
    3. Inzamam-ul-Haq - 6 February 2006
    4. Mohammad Hafeez - 21 March 2013

    ReplyDelete
  2. Yes Indeseant cricketers are Indians (pakistanies also originally indians)

    ReplyDelete
  3. @Naushad Anees

    I 'like' your comments. Well, maybe Pakistanis are given special training as to how to obstructing the field without losing the wicket... LOL...

    ReplyDelete

Powered by Blogger.