உள்ளூராட்சித் தேர்தல்களில் இனிமேல் விருப்பு வாக்கு இல்லை - அமைச்சர் அதாவுல்லாஹ்
(ஜே.எம். வஸீர்)
அம்பாரை மாவட்டத்தில் 7வது முறையாக நடைபெறும் தயட்ட கிருள வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் வாகன வசதிகள் இன்றி மிக நீண்ட காலமாக சிரமத்திற்குள்ளான உள்ளூராட்சி சபைகளுக்கு வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கி வைத்தார்.
வாகனங்கள் வழங்கப்பட்ட சபைகள் வருமாறு,
01. தெஹியத்தக்கண்டிய பிரதேச சபை
02. மகாஓய பிரதேச சபை
03. உஹண பிரதேச சபை
04. தமண பிரதேச சபை
05. பொத்துவில் பிரதேச சபை
06. நிந்தவூர் பிரதேச சபை
07. அக்கரைப்பற்று மாநகர சபை
08. கலமுனை மாநகர சபை
அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
தயட்ட கிருள வேலைத்திட்டம் இம்முறை 07ஆவது தடவையாக நடைபெறுகின்றது. அதற்காக அம்பாரை மாவட்டத்தை தெரிவு செய்தமைக்கு நான் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். தயட்ட கிருள வேலைத்திட்டத்தின் ஊடாக இன்று அம்பாரை மாவட்டத்தில் வாகன வசதிகள் இன்றி சிரமப்படும் 08 உள்ளூராட்சி சபைகளுக்கு கெப் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவ் 08 சபைகளும் வாகன வசதியின்றி பெரும் கஷ்டத்திற்குள்ளான சபைகளாகவே இச்சபைகளைக் காண்கின்றேன். இவ்வாகனங்களைப் பெற்றதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். மேலும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் வட்டார அடிப்படையிலேயே நடைபெறவுள்ளது. இனி நமது நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடைபெறமாட்டாது. எனவே வட்டார முறைக்கு உள்ளூராட்சி மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் தயராகவும் வேண்டும், மக்களின் அபிமானத்தையும் பெறவும் வேண்டும், இன்னும் நீங்கள் மக்களுக்காக மேலும் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் வட்டாரத்தில் உங்களுக்கு வாக்களிக்கும் மக்கள் உங்களைக் கவருவார்கள். மேலும் எமது அமைச்சு எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு இன்னும் பல வாகன வசதிகளை செய்து கொடுக்க தயாராகவுள்ளது எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ. ஹமீட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி. தாவூட், மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் உள்ளிட்ட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
எப்போதும் உங்கள் கதிரைகளைப்பற்றியே கதைங்க... சமூகத்தைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காதீங்க...
ReplyDeleteதத்தம் வயிற்றை வளர்ப்பதற்கே அமைச்சர் வழிசொல்லிக்கொடுக்கிறார். தற்போது மக்களைக் கவர்ந்து ஆட்சிக்கு வருவது தான் அரசியல்வாதிகளின் நோக்கம். சேவைசெய்யும் எண்ணம் செத்து பழைய காலம்.
ReplyDeleteAbu S.
He will worry only about controlling Akaraipattu MC and Akkaraipattu PS for him and son. Muslims worry about Halaal & Fartha and neglecting 'dayata Kirula' he says something else. This is the man who said 'No mosque attacked in Dambulla'. Our politicians??????
ReplyDeleteAbuanu, Riyadh ksa and Naif Deen!
ReplyDeleteTalking any thing about Muslims is not correct at this function by a Gov.Minister as it is a common function. But, the minister must talk about the Muslims at some other instances.