Header Ads



அல்லாஹ்வுக்காவும், சமூகத்திற்காகவும் அஸாத் சாலியை மன்னித்துவிட்டேன் - ஹசன் மௌலானா



(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)   

அஸாத் சாலி தொடர்பாக கலாநிதி அல்ஹாஜ் ஹஸன் மௌலானாவின் விளக்கம்.

கொழும்பு தெவட்டகஹ ஜூம்ஆ பள்ளிவாசலில் கடந்த 22.03.2013 அன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின்பின் அப்பள்ளிவாசலின் நிர்வாக சபையின் மதவிவகார குழு தலைவரும், ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளருமான அல்ஹாஜ் கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யது ஹஸன் மௌலானா(அல் காதிரி) விடுத்த பகிரங்க அறிவித்தல்: 

அவ்வறிவித்தலில் சொல்லப்பட்டதாவது கடந்த 15.03.2013 அன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப்பின் சகோதரர் அஸாத் சாலி பள்ளிவாசலுக்குள் என்னை ஏசிப்பேசி அகௌரவப்படுத்தியதை அல்லாஹ்வுக்காவும் எனது சமூகத்திற்காகவும் நான் மன்னித்துவிட்டேன். 

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் கொடுத்த முறைப்பாட்டையும் வாபஸ் பெற்றுவிட்டேன் என்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின் பகிரங்கமாக அறிவித்தேன்.

இவ்வறிவித்தலில் நான் விசேடமாக வேண்டிக்கொண்டதாவது, எமது முஸ்லிம் சமூகத்திற்காக குரல்கொடுத்து வரும் சமூக தலைவர்களுக்கு நீண்ட ஆயுல் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். இதுதான் எமது வருங்கால முஸ்லிம் சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் பெரும் ஸதகத்துல் ஜாரியாவாகும் என்று அறிவித்தேன்.  

எனக்கு அஸாத் சாலி ஏசியது எதற்காக?

15.03.2013 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப்பின் ஒரு அறிவித்தலை அறிவிக்கச் சொல்லி பள்ளிவாசலில் கடமைபுரியும் சிறாஜூதீன் மௌலவியின் கைத்தொலைபேசிக்கு அஸாத் சாலி எஸ்.எம்.எஸ்.அனுப்பினார். பிறகு எழுத்து மூலம் சிறாஜூதீன் மௌலவி அவ் அறிவித்தலை எழுதி இவ்வறிவித்தலை அஸாத் சாலி அறிவிக்குமாறு சொன்னார் என்று கூறினார்.

இவ் அறிவித்தலை ஜூம்ஆவுக்கு பிறகு நான் அறிவிக்க அனுமதி மறுத்ததே இதற்கான காரணம். அவ்வறிவித்தலிலும் எஸ்.எம்.எஸ் இலும் சொல்லப்பட்டிருந்தது. அதாவது, 'அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஹலால் சான்றிதழ் வழங்க எந்த உரிமையும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்ததாக சொல்லப்பட்டிருந்தது.'

இவ்வறிவித்தலை வாசிக்க அனுமதி மறுத்ததால்தான் இந்தப் பிரச்சினை நடந்தது. இவ் அறிவித்தலை மறுத்த காரணம். குறிப்பாக இதுவரைக்கும் (15.03.2013) ஹலால் சான்றிதழ் தொடர்பாக அ.இ.ஜ.உ சபை இப்படி ஒரு செய்தியை எங்கும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.  

இது தொடர்பாக இவ்வறிவித்தலை பள்ளியில் வாசிக்க நான் அனுமதி மறுத்ததை பள்ளிநிர்வாகிகள் என்னிடம் வினவினார்கள். நான் நிருவாகிகளுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்ததையடுத்து எனது முடிவை சரியென ஏற்றுக்கொண்டார்கள். இனிமேல் இப்படியான அறிவித்தல்கள் கிடைக்கப்பெற்றால் பள்ளிவாசல் நிர்வாக சபையின் முழு அனுமதியின்றி அறிவிக்கக்கூடாது என்றும் சொன்னார்கள்.

பொலிஸில் போடப்பட்ட புகாரை நான் எதற்காக வாபஸ் பெற்றேன்? 

21.03.2013 வியாழக்கிழமை அன்று தெவட்டகஹ பள்ளிவாசலில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மகனும் அவரது பிரத்தியேக செயலாளருமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யது நகீப் மௌலானா, சமூக சேவையாளர் கனி ஹாஜியார், சமூக சேவையாளரும் அஸாத் சாலியின் மைத்துனருமான றிஸ்வி ஹாஜியார், தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக முகாமையாளர் சித்தீக் ஹாஜியார் மற்றும் முக்கியமான பிரமுகர்கள் உலமாக்கள் ஒன்றுகூடி இதுதொடர்பாக ஆலோசனை(மசூரா) செய்து இனிமேல் அஸாத் சாலியால் உங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வராது அதற்கு நாங்கள் பொறுப்பு என்று உறுதிமொழியளித்தார்கள்.

இந்த மூத்த சமூக தலைவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வுக்காகவும் எனது முஸ்லிம் சமூகத்திற்காகவும் சகோதரர் அஸாத் சாலியை நான் மன்னித்தேன். அத்துடன் பொலிஸ் நிலையத்தில்(சி.சி.டி) கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன் என்று ஆலோசனைக் குழுவிடத்தில் உறுதியளித்து உடனடியாக சத்திய கடதாசியையும் எழுதி ஒப்பமிட்டு அந்த ஆலோசனைக் குழுவிடம் தெவட்டகஹ பள்ளியில் வைத்து(21.03.2013) வியாழக்கிழமையன்றே ஒப்படைத்தேன்.

அத்துடன் அடுத்த நாள் 22.03.2013 வெள்ளிக்கிழமை அஸாத் சாலியின் வழக்கறிஞர் எம்.எம்.மொஹிடீன் ஆலோசனைக்கு உறுப்பினர்களான கனி ஹாஜியார், அஸாத் சாலியின் மைத்துனர் றிஸ்வி ஹாஜியார் ஆகியோருடன் பொலிஸ் நிலையத்திற்கு(சி.சி.டி) சென்று 21.03.2013 தெவட்டகஹ பள்ளியில் நடந்த ஆலோசனை சம்பவத்தை பொலிஸாருக்கு எடுத்துச் சொல்லி அஸாத் சாலியின் பெயரிலான முறைப்பாட்டை வாபஸ்பெற்றுக் கொள்கிறேன் இன்மேல் அஸாத் சாலியால் எனக்கு எந்த பிரச்சினையும் வராது என்று ஆலோசனைக்குழு பொறுப்பேற்றுள்ள செய்தியை பொலிஸாரிடம் சொல்லி நான் கொடுத்த வாக்கு மூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டேன். பொலிஸார் எழுதிய எனது வாக்கு மூலத்தை அஸாத் சாலியின் வழக்கறிஞரிடம் நான் வாபஸ்பெற்ற வாக்கு மூலத்தை மீண்டும் பரிசீலனை செய்து பார்க்குமாறும் அவ்வாக்கு மூலம் அஸாத் சாலியின் வழக்கறிஞரால் சரியென ஏற்றுக்கொண்டபின்பே வாபஸ்பெற்ற வாக்கு மூலத்தில் கையொப்பம் இட்டேன்.

இதுதான் உண்மை நிலையாகும். 

குறிப்பாக அஸாத் சாலிக்கு விரோதமாக எவரும் என்னை செயல்படுமாறு தூண்டவோ, செயற்படவோ கூறவில்லை. இதற்குமுன் எனக்கும் சகோதரர் அஸாத் சாலிக்கும் எந்தவித கோபதாபங்களோ கருத்து வேறுபாடுகளோ இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது என்பதை சொல்லிக்கொள்வதோடு (கடந்த 15.03.2013 வெள்ளிக்கிழமை தெவட்டகஹ பள்ளிவாசலினுல் அஸாத் சாலி என்னை ஏசிப்பேசி ஏனையோர் முன்னிலையில் அகௌரவப்படுத்தியதாலேயேதான் நான் பொலிஸ் நிலையம் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது)

விசேடமாக நானும் அஸாத் சாலியும் ஒரே சுன்னத்துவல் ஜமாத் கொள்கையை சேர்ந்தவர்கள், இருவருமே தெவட்டகஹ பள்ளிவாசலில் அடங்கித்திகலும் இறைநேசர் ஷெய்க் உஸ்மான் வலியுள்ளாஹ்வை நேசிப்பவர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.  இதுவரைக்கும் என்னால் சொல்லப்பட்ட அத்தனையும் உண்மை என்பதை அல்லாஹ்வின்மீது சத்தியமாக உறுதியுடன் சொல்கின்றேன்.

இப்படிக்கு ஹஸன் மௌலானா.

21 comments:

  1. முதலில் "கபுர்" வணங்கிகளான உங்களை அல்லாஹ் மன்னிக்கட்டும் ..

    ReplyDelete
  2. இவங்கதான் பதவிக்காகவூம் பட்டத்துக்காகவூம் சமுகத்தை பேரினவாதிகள்ட காட்டிக் கொடுத்தவங்க. தவ்ஹீத் ஜமாஅதே இஸ்லாம் ஷபாப் என அவங்க பேசுறத்துக்கு தகவல் கொடுத்த கோடாரிக் காம்புகள். இவங்களுக்கு தான் அவர்கள் பாரம்பரிக்க முஸ்லிம் என்கிறர்கள் போலும். இப்ப புலி வால புடிச்ச மாதரி விழுங்கவூம் முடியாம கக்கவூம் முடியாம ...

    ReplyDelete
  3. ஒருவர் பகிரங்கமாக ஏசிப் பேசினார் என்பதற்காக CID யில் முறைப்பாடு செய்யவதோ!!!
    வழமையான பொலிஸ் நிலையங்கள் எதற்காக???

    ReplyDelete
  4. ivanga rendupeyrudaiya koluhal udeyyawarkal sunnaththu jamaaththaake irunndaal, naangellam farlu jammaaththo!!

    ReplyDelete
  5. ivanga rendupayrudeyya koluhal udayyawarakal sunnath jamaaththaake irundaal naange farlu jamaaththo!!

    ReplyDelete
  6. நீங்கள் மன்னிக்கும் அளவுக்கு ஆசாத்சலிஹ் என்னகுற்றம் செய்தார்?.உங்களுக்கு ஜனாதிபதி யார்?உங்களின் பதவிக்காகவும்.சுகபோகத்த்திட்காவும்.முஸ்லிம் சமுதயத்துக்காக குரல் கொடுத்துக்குண்டிருந்த ஒருவரை காட்டிக்குடுத்துவிட்டு.அல்லாஹ்வுக்காக மன்னிக்கிறேன் என்று சொல்கிறீர்களே!உங்களைத்தான் அல்லா ஒருபோதும் மன்னிக்கமாட்டான். உங்கள்மாதிரி சமூகத்துரோகிகள் உள்ளவரைக்கும் நம் சமுதாயத்துக்கு விமொசனமேகிடைக்காது

    ReplyDelete
  7. கபுறு வணங்கி அசாத் சாலி கர்ஜிப்பதும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துகின்ற ஒருவகையான அசம்பாவிதம்தான்.

    இந்த அசாத் சாலியும் கூட ஒரு முஸ்லிம் தலைவராக காட்டிக்கொள்ள இந்த துரும்புச்ச்சீட்டை பயன்படுத்தி பிரபல்யம் அடையப்பார்கிறார் என்பதுதான் உண்மை. தான் ஒரு அஸ்ரப்க்கு நிகராநவராக காட்ட முற்படுகிறார் இந்த கபுறு வணங்கி சாலி. அசாத், இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கின்றார்.

    ஆக, இந்த அசாத் என்பவர் மாபெரும் கபுறு வணங்கிகள்தான் எபது இவர்கள் மூலமே நிருபணம். இந்த கபுறு வணங்கிகள் இவ்வாறு கூச்சலிடுவதால் எந்த இறைவனால் இவர்களுக்கு பாதுகாப்பு கிட்டும்? மக்களே சிந்தியுங்கள்!! அந்த இறைவனால் இன்னும் நாசம்தான் உண்டாகும் சிட்ச்சயமாக.

    ReplyDelete
  8. You guys keep your Fithna among yourselves. Don't involve Muslim community and Masjid as a place of showing your power and influence. This is a multi million business game behind.

    ReplyDelete
  9. ஆசாத் சாலியும் உம்மைப்போல ஒரு கபுறு வணங்கியா?ஆசாத் சாலியின் அகீதா (ஈமானின்)வின் நிலையை அறிய வைத்த அல்லாஹு த்த ஆலாவுக்கே எல்லாப்புகழும்.

    ReplyDelete
  10. பார்த்தீர்களா அவசரப் படும் அறிஞர்கூட்டமே!! இதுவெல்லாம் திட்டமிட்ட நாடகங்கள். பேச்சில், செய்தியில் முன்னுக்குப் பின் முரண். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். "அசாத் சாலியின் ஆதரவைப் பார்த்து பயந்துவிட்டார்" என்று ஏதாவது ஒரு அறிவிலி சொல்லாமல் விட்டால் சரிதான். சோடாப் போத்தல் வேகத்தில் யோசிக்காதீர்கள்.அது தான் புத்தியை மழுங்கடிக்கும். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வரை போனவரின் பேச்சா இது? எல்லோரும் சேர்ந்து நடிக்கிறார்கள் அல்லாஹ்வின் பெயரையும் , சமூகத்தையும் அதற்கு பயன் படுத்துகிறார்கள். இவர்களிருவரும் யார் என்றாவது நமது சமூகம் யோசிக்குதா? அசாத் சாலியின் Marketing Trick சூப்பர்பா.

    ReplyDelete
  11. make unity between muslilis. jazakallhu kayraa....

    ReplyDelete
  12. நன்பர்களே அல்லஹ்விற்குப்பயந்துகொல்லுங்கள் அவன் மரய்வானவற்றை நான்கறிந்தவன். உங்களுக்குத்தெரியாத சந்தேகத்திற்குரிய விடயங்களிள் நீங்களே ”பத்வா” கொடுக்கின்றீர்க்ள் எமது சமுதாயட்திற்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள இவ்வாரான சோதனைகளுக்கு இதுவும் ஒரு பிரதான காறணம் என்பதை இறை அச்சத்துடன் சற்று சிந்தித்து உன்களுடையய கறுத்துக்கலைப் பகறுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினையினையில் சமூகத்தின் நாழன் கறுதி அல்லாஹ்விற்காக விட்டுக்கொடுப்புடன் நடந்துள்ளார்கள் என்பது புகளழுக்குறியதே அல்ஹம்துலில்லஹ். ஆனால் அனாகறீகமான அபாண்டமான பழிகளை இவர்கள்மீது சுமத்தி சமூக ஒற்றுமையினை குழைக்கும் இவ்வறான கறுத்துப்பகிர்வுகலை இறையச்சமுள்ள என்ந்த மனிதனாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ReplyDelete
  13. assalamu alikkum....konchcham awasara padawanam. yankalukkulla kulappurathukku kaboor wananki solly erukkalam. porumayyaha eruppom. awasarapaddu warthayhaly koddawanam. jazakkalauhair

    ReplyDelete
  14. My dear Mr. Hassan Qaidiri, you are totally wrong. You have to inform the committee of the mosque no sooner you got the message, you have no right to decided what to do. Is not this your fault. Otherwise, you should have spoken to Mr. Asad Saly regarding this and ask for clarification. Without doing this all, you have made your decision and brought it to the knowledge of CID. You all bloody moulanas are the people who ruin the unity between Muslims. Better learn lessons now! Moreover, who the hell are you to forgive Mr. Asad Saly, you dont deserve it at all comapring to what he and you have done to the Muslim community in crisis now, remember that!

    ReplyDelete
  15. 6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்

    ReplyDelete
  16. அஸாத் ஸாலி அவர்களே! நீங்களும், மௌலானாவும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என மௌலானா வர்ணித்துள்ளாரே. இவ்வுலக வாழ்க்கை, அரசியல், பட்டம் பதவிகள் எல்லாம் இன்றோ, நாளையோ அழிந்து விடும் வீணும் விளையாட்டுகளும். விலை கொடுத்து வாங்க முடியாத ஈமானை சரிவரக் கற்று சுவர்க்க வாழ்க்கைக்காக காலடி எடுத்தது வைப்பீர்களா? அல்லாஹ் உங்கள் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் திருப்புவானாக. கப்ரை விட்டுவிட்டு இறைவனிடம் கையேந்துபவர்களாக உங்களிருவரையும் ஏனைய முஸ்லிம்களையும் மாற்றியமைப்பானாக.

    ReplyDelete
  17. முஸ்லிம்களின் நிலை பற்றி பேசுவதற்கு ஒருத்தர் கூட முன் வராது திராணியற்றவர்களாக இருக்கும் இன் நிலையில் அசாத் சாலி போன்ற அரசியல் பிரமுகர்கள் பேசுவது மிகப்பெரும் போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வில்லை. நமக்குள் இன்னும் பிணக்குகள் பற்றி பேசுகிறோமே தவிர நம் நிலைமையை மாற்றி அமைக்கும் செயலை நம் கண் மூடித் தனமான மத நம்பிக்கை மூலம் மறு க்கிறோம் என்பது வருந்தத் தக்கது. மற்றவனை காபிர், கபூர் வணங்கி என்று தீர்ப்பு சொல்வதில் காட்டும் அக்கறை,ஒட்டு மொத்த சமூகமும் கேள்விக்குறியாகும் செயற்பாட்டை ஒன்று சேர்ந்து வென்றெடுக்க ஏன் நாம் பயன் படுத்தவில்லை. நம்மிடம் இருக்கும் இந்த நோயை நாம் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் இப்படித் தீர்ப்புக் கூறி சம்மூகத்தை கூறு போடும் களைகளை முதலில் பிடுங்கி எறிதல் வேண்டும். அப்போதுதான் ஒருமித்த குரலில் நம்மால் போராட முடியும்.

    ReplyDelete
  18. ALLAH vai antri veru yaraium MOULANA entru alaikatheerkal

    ReplyDelete
  19. @Peace srilanka
    அசாத் சாலியின் வரலாறைப் பார்த்தால் புரியும் இது எந்த அளவுக்கு மக்களுக்காக செய்யப்படும் வேலைத் திட்டம் என்று. எங்களைப் பொருத்தவரை அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கூட்டம் தூங்குகிறது. முஸ்லிம்களின் பிரச்சினையை அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை. அதே நேரம் அதிகாரத்தில் இல்லாத முஸ்லிம் அரசியல் கூட்டம் இந்த உறக்கத்தைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறது. நிதானமாக சிந்தித்தால் புரியும் இவர்கள் நிலைப்பாடு மக்களைச் சார்ந்ததா அல்லது சொந்த நலன் சார்ந்ததா என்று. இந்த பச்சோந்திகளை சமூக நலன் கருதியே இனம்காட்டுகிரோமே ஒழிய இவர்களுடன் எமக்கு எந்த தனிப்பட்ட கோபமும் இல்லை.
    சமுதாயத்தில் உள்ள புல்லுருவிகளை களையெடுக்கும் வரை நமது பாதுகாப்பு கேள்விக்குறியே. புல்லுருவிகள் விடயத்தில் ஒற்றுமை , வேற்றுமை ஏதும் கூற முடியாது. இதில் அசாத் சாலி புல்லுருவி இல்லாவிட்டாலும் அவர்களுக்கு நெருக்கமானவர். சமூகப் ம்பிரச்சினையில் தெட்டத் தெளிவாக மீன் பிடிப்பவர். அவரது அரசியல் போக்கு முஸ்லிம்களுக்கு பாதகமான, சமயோசிதமில்லாத போக்கு. தெளிவான அரசியல் கொள்கை இல்லாதவர். இப்பொழுது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கிறார் என்பதற்காக சமூக விடயத்தில் உங்களைப் போல அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.