முஸ்லிம் நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை சிகிச்சை பெறுமாறு அறிவிப்பு
(Tn) மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை திரும்பியிருக்கும் எவருக்காவது சுவாசத் தொகுதியோடு தொடர்புடைய நோய்கள் காணப்படுமாயின் அவர்கள் தாமதியாது அருகிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவின் பிரதம நோய் பரவுதல் தடுப்பு நிபுணர் பபா பலிகவர்தன இவ்வாறு நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கு நாடுகளில் புதுவகை வைரஸ் ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. அதுவே கொரனோ வைரஸ் orono virus ஆகும். இவ்வைரஸ் தாக்கம் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் இற்றை வரை 14 பேருக்கு இவ்வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் இந்நோய்க்கு இலங்கையர் எவருமே இற்றைவரை உள்ளாகவில்லை.
ஆயினும் இலட்சக்கணக்கான இலங்கை யர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிகின்றனர். அதனால் நாம் விழிப்பாக இருப்பது அவசியம்.
இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்ற வர்களுக்குக் காய்ச்சல், மூச்செடுப்பதில் சிரமம், இருமல் போன்ற சுவாசத் தொகுதியோடு தொடர்புடைய உபாதைகளை அவதானிக்க முடியும். ஆயினும் உரிய சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந் நோயைக் குணப்படுத்திவிடலாம்.
இவ்வைரஸ் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும், இருமும்போதும் வெளியாகும் சளித்துகள்கள் மூலம் இவ்வைரஸ் வெளிப்பட்டு அடுத்தவர்களுக்கு சுவாசத்தின் மூலம் தொற்றும் என்றாலும் இது கிலிகொள்ளக்கூடிய நோய் அல்ல என்றும் அவர் கூறினார்.
Post a Comment