பற்களை உருவாக்க முடியுமா..? ஆராய்ச்சி தொடருகிறது..!
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக்குழு பல் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், மனிதனின் அறிவுப் பல் (கடவாய் பல்) அருகிலுள்ள ஈறுகளில் இருந்து செல்களை எடுத்து, அந்த செல்களை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து பல மடங்காக பெருக்குகின்றனர்.
பின்னர் இந்த செல்களுடன் எலியின் கருப்பையில் ரத்த, எலும்புத் திசுக்களை இணைக்கும் ஒருவகை திசுவை இதனுடன் சேர்க்கின்றனர். இந்த எலியின் திசு மனிதனின் செல்களை பற்களாக வளர தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் வேருடன் கூடிய முழுமையான எலி அல்லது மனிதனின் பற்களை உருவாக்க முடியும். இதன் சிறு பகுதியை எடுத்து தாடைப் பகுதியில் வைத்தால் அது மனிதனின் பற்களைப் போலவே வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு 10-லிருந்து 15 ஆண்டுகளில் பயன்படுத்தும் வகையில் முழுமை பெற்று விடும் என்று இந்த ஆராய்ச்சிக்குழு தலைவர் பேராசிரியர் பால் சார்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி தொடர்பாக 'ஜெர்னல் ஆப் டென்டல் ரிசர்ச்' என்ற பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி உள்ளது.
Post a Comment